கம்பராமாயணம் 5734 · சுந்தர 11.18

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?"என்னாச்
சிந்தையின் உவகை தோன்ற, முனிவு உற்ற குரக்குச் சீயம்,
"வந்தனன்; முடிந்தது அன்றோ? மனக் கருத்து"என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

முனிவு உற்ற குரக்குச் சீயம் - (அக்ககுமாரன் வரவு கண்டு) பெருங் கோபம் கொண்டுள்ள குரங்குகளுள் சிங்கம் போன்ற அனுமன்; இந்திர சித்தோ ? - (இப்போது போருக்கு வரும் இவன்) இந்திரசித்தோ ?; மற்று அவ் இராவணனேயோ வந்தனன் என்னா - அல்லது (நான் எதிர்பார்த்திருக்கும்) இராவணன் தானோ? போருக்கு வந்துள்ளான் என்று; சிந்தையின் உவகை கொண்டு - மனத்தில் மகிழ்ச்சி மேற்கொண்டு, மனக் கருத்து முடிந்தது அன்றோ - எனது எண்ணம் நிறைவேறிவிட்டதன்றே; என்ன - என்று சொல்லி; சுந்தரத் தோளை நோக்கி, வாழ்த்தி - தனது அழகிய தோள்களைப் பார்த்து (அவற்றுக்கு) வாழ்த்துக் கூறி; இராமனைத் தொழுது - இராமபிரானை மனத்தால் நினைத்து வணங்கி விட்டு; சொன்னான் - சொல்லிக் கொண்டான்.

இராமனைத் தொழுதல் அடிமைச் சிறப்பு. சினம், உவகை இரண்டு உணர்ச்சிகளும் கொண்ட முரண் ஓவியம் பற்றி எண்ணிப் பார்க்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is it Intiracittu? Or is it that Irāvaṇaṉ himself?
  2. He has come; is not my heart's purpose fulfilled?' Thinking this, the lion among monkeys,
  3. angry yet glad at heart, blessed
  4. his handsome shoulders, worshipped Irāmaṉ, and spoke.

What the poem says

Seeing the grand procession, Aṉumaṉ wonders whether it is Intiracittu or even Irāvaṇaṉ himself coming to fight, and he is delighted: the chance he has been hoping for has arrived. Angry and joyful at once, he looks fondly at his strong shoulders, salutes Irāmaṉ in his mind as a devoted servant would, and speaks to himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"intiracittō? maṟṟu av irāvaṇaṉēyō?"eṉṉā
cintaiyiṉ uvakai, koṇṭu muṉivuṟṟa kurakkuc cīyam,
"vantaṉaṉ; muṭintatu aṉṟō? maṉak karuttu"eṉṉa vāḻtti,
cuntarat tōḷai nōkki, irāmaṉait toḻutu coṉṉāṉ.