கம்பராமாயணம் 5733 · சுந்தர 11.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெள்ள வெஞ்சேனை சூழ - வெள்ளம் என்னும் கணக்கான கொடிய சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; விண் உளோர் வெருவி விம்ம - தேவர்கள் அஞ்சிக் கலக்கம் அடையவும்; உள்ளம் நொந்து அனுங்க, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன - மனம் வருந்தியிருந்த கொடிய யமனும் எது என்ன ஆகுமோ என அழுங்கி நிற்கவும்; துள்ளிய சுழல் கண் பேய்கள் - மகிழ்ச்சியால் துள்ளியனவும் சுழல்கின்ற கண்களை உடையனவுமாகிய பேய்கள்; தோள் புடைத்து ஆர்ப்ப - தம் தோள்களைக் கொட்டி ஆரவாரம் செய்யவும்; காற்றின் சேய் - வாயுவின் மகனாகிய அனுமன்; தோன்றும் கள் அவிழ் அலங்கலானை - விளக்கமாகத் தெரியும் தேன் சொரியும் மாலை அணிந்த அக்ககுமாரனின்; வரவு கண்டான் - வருகையைப் பார்த்தான்.
அனுமன் பார்த்தபோது, அக்ககுமாரனது வருகை எப்படி அமைந்திருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது இப்பாடல். அலங்கலானைப் பார்த்தான்; வரவு பார்த்தான் எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க. வெள்ளம் - ஒரு பேரெண். பேய் ஆர்ப்ப என்பதால் அரக்கர் அழிவு குறித்ததாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a flood of fierce army around him, while the gods in heaven sobbed with fear,
- while even cruel Death, pained and anxious at heart, wondered what would happen,
- while leaping ghouls with rolling eyes slapped their shoulders and shouted,
- the son of the Wind saw the coming of the one with the honey-dripping garland.
What the poem says
The sentence that began several verses earlier reaches its end. Aṉumaṉ, son of the Wind, watches Akkaṉ approach, garlanded and surrounded by an army numbered in veḷḷams, a vast count.
The gods are frightened, even Yama wonders what will happen, and ghouls leap about slapping their shoulders in glee, a sign that many demons are about to die.