கம்பராமாயணம் 5732 · சுந்தர 11.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓங்கு இருந்தடந்தேர் பூண்ட - உயர்ந்த மிகப்பெரிய தேர்களில் கட்டப்பெற்ற; உளை வயப் புரவி - பிடரிமயிரை உடைய குதிரைகள்; ஒல்கித் தூங்கின வீழ - சோர்ந்து தூங்கி விழவும்; தோளும் கண்களும் இடத்துத் துள்ள - இராக்கதரது தோள்களும் கண்களும் இடப்பக்கத்துத் துடிக்கவும், வீங்கின மேகம் - மிக்குள்ள மேகங்கள்; எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப - எவ்விடத்தும் இரத்தத் துளியைச் சொரியவும்; ஏங்கின காகம் ஆர்ப்ப - ஏங்கியிருந்த காகங்கள் (மகிழ்ச்சி கொண்டு) ஆரவாரிக்கவும்; இருள் இல் விண் இடிப்ப - இருள் அடையாத (நிர்மலமாயிருந்த) ஆகாயம் இடி முழங்குவது போல ஒலி உண்டாக்கவும்.
மாது, ஓ: அசைநிலைகள். “காற்றின் சேய் வரவு கண்டான் என அடுத்த கவியோடு முடியும். பகற்காலத்தே மேக மூட்டம் நேரிடின் ஒளி குறையும், இங்கே இருள் இல் விண் என்றது மேக மூட்டத்தால் இருள் சூழாத ஆகாயத்தைச் சுட்டிற்று. பகற் காலத்தில் மேகம் இல்லாமல், திடீரென்று மேகம் கூடி இடி முழங்கி வெள்ளிடி என்பர். இது தீய சகுனம். இங்கு, குறிக்கப் பெற்ற அனைத்தும் அக்ககுமாரனுக்கும் அவன் படைக்கும் இனி உண்டாகும் கேட்டை உணர்த்தும் உற்பாதங்கள் (தீய குறிகள்) ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the strong maned horses yoked to the tall, huge, broad chariots
- faltered, drooped and fell, as shoulders and eyes throbbed on the left side,
- as swollen clouds everywhere let fall drops of blood,
- as crows that had been crying out cawed loudly, and the cloudless sky thundered.
What the poem says
Evil omens attend the march. The chariot horses stumble and collapse, the demons feel their left shoulders and left eyes twitch, clouds rain drops of blood, crows caw raucously, and thunder rolls out of a clear sky.
Thunder from a cloudless sky was considered a very bad sign. All these portents foretell the ruin of Akkaṉ and his army.