கம்பராமாயணம் 5731 · சுந்தர 11.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெயில் கர மணிகள் - வெயிலைப் போன்று ஒளி விளங்குகின்ற (ஆபரணங்களில் உள்ள) இரத்தினங்கள்; வீசும் விரிகதிர் விழுங்க - உலகம் முழுவதும் பரவி விரிந்த சூரியனது ஒளியை அடக்கவும்; வெய்ய அயில் கரம் - கொடிய வேலாயுதங்களினால் தோன்றுகின்ற ஒளி; மணிகள் காலும் அவிர் ஒளி பருக - (ஆபரணங்களில் இழைத்த) இரத்தினங்கள் வெளியிட்டு விளங்குகின்ற ஒளியை அடக்கவும்; அஃகா எயிறு இளம்பிறை ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க - குறைவுபடாத அரக்கர்களுடைய பற்களாகிய இளம் பிறைகள் உண்டாக்கிய விளங்கும் ஒளியில் ஒதுங்கி மறையவும்; யாணர் உயிர்க்கு - (இவ்வாறு இருத்தலால்) (பிறப்புத் தோறும்) புதிது, புதிதாகப் பிறக்கும் உயிர்க் கூட்டத்திற்கு; உலவு இரவும் அன்று - (இது உலகத்தில்) தோன்றுகின்ற இராக்காலமும் அல்ல; பகல் அன்று என்று - (அவ்வாறே உலகத்துத் தோன்றும்) பகலும் அல்ல என்று; உணர்வு தோன்ற - ஒருணர்ச்சி உண்டாகவும்...
இடத்துத் துள்ள என்று அடுத்த கவியோடு தொடரும். கரம் - ஒளி. யாணர் - புதுமை. பிறப்புத் தோறும் புதுமை கொள்வதால் 'யாணர் உயிர்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sun-bright jewels swallowed the spreading rays of the sun, as the fierce
- spear-blades drank up the flashing light the jewels poured out,
- as the shining light born of the young crescent moons of their undiminished fangs made all else shrink back,
- so that living beings, ever new, felt: this is neither night nor day.
What the poem says
The radiance of the army outshines everything. The gems on the warriors' ornaments outshine the sun; the gleam of their spears outshines the gems; and the white crescent-shaped fangs of the demons outshine even the spears.
The result is a light so strange that all living creatures, born anew in each life, feel that it is neither night nor day.