கம்பராமாயணம் 5730 · சுந்தர 11.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உலந்தவர்க்கு உரிய மாதர் - (முன்னே நிகழ்ந்த போரில்) இறந்த அரக்கர்களுக்கு உரிய மனைவியர்களாகிய; உழைக்குலம் நோக்கினார்கள் - மான் கூட்டம் போன்ற (மருண்ட) பார்வையை உடைய அரக்கியர்கள்; அழைத்து அழுகுரலின் - தமது கணவர்களை நினைத்து அழைத்து அழுகின்ற குரலினாலும், வேலை அமலையின் - கடலின் ஒலியினாலும்; அரவச் சேனை தழைத்து எழும் ஒலியின் - ஆரவாரம் செய்கின்ற சேனைகள் திரண்டு செல்வதால் நிகழ்ந்த ஒலியினாலும்; நானா பல் இயல் துவைக்கும் - பலவகையான வாத்தியங்கள் ஒலிக்கின்ற; தா இல் மழைக்குரல் இடியின் - குற்றம் இல்லாத மேகத்தின் தொனியாகிய இடிபோன்ற பேரொலியாலும்; சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப - ஒருவர்க்கு ஒருவர் பேசிய வார்த்தைகள் பிறர்க்குக் கேட்காமல் அடங்கிவிடவும்....
'விழுங்க' என அடுத்த கவியோடு தொடரும். படை செல்லுங்கால் எழுந்த பேரொலி வருணிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the wailing cries of the doe-eyed women, wives of those who had died,
- calling out their names, with the roar of the sea, with the din
- of the clamorous army swelling as it rose, and with the flawless thunder
- like rain-clouds of many kinds of instruments sounding, all words spoken were drowned.
What the poem says
The noise is overwhelming: the widows of the demons already killed by Aṉumaṉ wail and call their husbands' names, the sea roars, the army shouts, and the instruments boom like thunder. No one can hear anything anyone says. The sentence continues into the following verses.