கம்பராமாயணம் 5729 · சுந்தர 11.13

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல;
பாகு உள கிளவி செவ்வாய் படைவிழி பணைத்த வேய்த் தோள்
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற.

பொருள் · Meaning in Tamil

காகமும், கழுகும், பேயும் காலனும் - காகங்களும், கழுகுகளும் பேய்களும் யமனும்; கணக்கு இல் காலம் சேகு உற வினையின் செய்த தீமையும் - பலகாலம் திண்மை உண்டாக (அவ்வரக்கர்கள் தமது) செயலால் செய்த பாவமும்; தொடர்ந்து செல்ல - அக்ககுமாரனது படையுடன் பின் தொடர்ந்து செல்ல; பாகு இயல் கிளவிச் செவ்வாய் - பாகின் இனிமை வாய்ந்த சொற்களையும் சிவந்த வாயையும்; படை விழிப் பணைத்த வேய்த் தோள் - வேலாயுதம் போன்ற கண்களையும், பருத்த மூங்கில்கள் போன்ற தோள்களையும் உடைய; தோகையர் மனமும் - மயில் போன்ற சாயலையுடைய அரக்கிமார்களது மனமும்; தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற - தொகுதியான வண்டுக் கூட்டங்களும் அவர்களைத் தொடர்ந்து சுற்றிச் செல்லவும்.

'மாற்றங்கள் ஒழிப்ப' என்று அடுத்த கவியோடு தொடரும். அக்ககுமாரன் பேரெழுச்சி கூறப்பட்டது. போரில் அக்க குமாரனுக்கு உதவி செய்வோர் பயன்படும் கருவிகள் ஆகிய விவரங்கள் கூறப்பட்டன. போரில் நிகழவிருக்கும் அழிவுகளை எதிர்நோக்குவனவும், போர்க்குச் செல்வோரை நினைந்து இரங்கும் பரிவுக்கு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crows, vultures, ghouls and Kālaṉ, and the evil done by their deeds
  2. over countless ages, grown hard, followed after them;
  3. the hearts of the peacock-like women with syrup-sweet speech, red lips,
  4. spear-like eyes and shoulders like swelling bamboo, and swarms of bees, followed and circled round.

What the poem says

Akkaṉ's army is followed by ominous companions: crows, vultures and ghouls eager for corpses, Yama, god of death, and the accumulated sins of the demons over countless ages.

The hearts of their beautiful wives, with sweet words, red lips, spear-sharp eyes and smooth bamboo-like shoulders, follow them anxiously, as do swarms of bees drawn to their garlands. The description continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kākamum, kaḻukum, pēyum, kālaṉum, kaṇakku il kālam
cēku uṟa viṉaiyiṉ ceyta tīmaiyum, toṭarntu cella;
pāku iyal kiḷavic cevvāyp paṭaiviḻip paṇaitta vēyt tōḷ
tōkaiyar maṉamum tokka tumpiyum toṭarntu cuṟṟa.