கம்பராமாயணம் 5728 · சுந்தர 11.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று இவை முதல ஆய - என்று சொல்லப்படுகின்ற இவை முதலாக உள்ள; எறிதரு படைகள் ஈண்டி - தாக்குதற்குரிய ஆயுதங்கள் நெருங்கியதனால்; மின் திரண்ட அனைய ஆகி - மின்னல்கள் ஒரு சேரத் திரண்டாற் போன்று; வெயிலொடு நிலவு வீச - வெயிலையும் நிலாவையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க; துன்று இரும் தூளி பொங்கித் துறுதலால் - நெருங்கிய மிக்க தூளிகள் மேலெழுந்து (வானத்தில்) நெருங்கியதனால்; இறுதி செல்லா - முடிவுக் காலம் இது என்று கணிக்க முடியாத; பொன் திணி உலகம் எல்லாம் - பொன் திணித்து அமைக்கப்பெற்ற சுவர்க்க உலகம் யாவும்; பூதலம் ஆய - நில உலகம் போன்று விளங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As these and other hurling weapons crowded together
- like massed lightning, giving off sunlight and moonlight,
- and the thick dense dust rose up and packed the sky, the gold-built worlds
- that know no ending all became like the earth.
What the poem says
The mass of weapons flashes like gathered lightning, shining like both sun and moon. The army raises so much dust that it fills the sky and settles on the golden heavenly worlds, which never end, so that they look like the dusty earth below.