கம்பராமாயணம் 5741 · சுந்தர 11.25

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எறிந்தனர், நிருதர் வெய்தின் எய்தின படைகள் எல்லாம்,
முறிந்தன வீரன் மேனி முட்டின, முகர யானை
மறிந்தன, மடிந்த தேரும் மான மாக் குழுவும், மற்றும்
நெறிந்தன வரம்பில் யாக்கை, இலங்கை தன் நிலையில் பேர.

பொருள் · Meaning in Tamil

நிருதர் வெய்தின் எறிந்தன எய்தன படைகள் யாவும் - அரக்கர்கள் சினத்தோடு வீசி எறிந்தவைகளும் தூண்டியவைகளுமான ஆயுதங்கள் எல்லாம்; முறிந்தன - (உட்செல்ல முடியாமல்) ஒடிந்து போயின; வீரன் மேனி முட்டின மூரி யானை மறிந்தன - அனுமன் உடம்பை மோதிய வலிமை பொருந்திய யானைகள் இறந்து போயின; தேரும் வாவும் மா குழுவும் மடிந்த - தேர்களும், தாவிச் செல்லும் குதிரைக் கூட்டமும் அழிந்தன; இலங்கை தன் நிலையின் பேர - இலங்கை நகர் தன் இயல்பில் மாறுபட; வரம்பு இல் யாக்கை ஆவி நெறிந்தன - எல்லையில்லாத அரக்கர்களின் உடல்கள் நொறுங்க உயிர் நீங்கின.

அரக்கர்படைக்கலம் அனுமன் மேல் பட்டு முறிந்து விழ, அனுமன் தாக்குதலால், இலங்கையின் நிலை கெடுமாறு படைகள் அழிந்தன என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the weapons the demons hurled and shot in their fury
  2. broke; the mighty elephants that butted against the hero's body
  3. fell dead; the chariots and the herds of leaping horses perished; and
  4. bodies without number were crushed, so that Ilaṅkai was shaken from its state.

What the poem says

The demons' weapons simply break against Aṉumaṉ's body; elephants that charge into him fall dead; chariots and horses are destroyed; and countless demons are crushed to death, so that the whole condition of Laṅkā is changed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟintaṉa, nirutar veytiṉ eytaṉa paṭaikaḷ yāvum,
muṟintaṉa vīraṉ mēṉi muṭṭiṉa, mūri yāṉai
maṟintaṉa, maṭinta tērum vāvum māk kuḻuvum, maṟṟum
neṟintaṉa varampu il yākkai, ilaṅkai taṉlaiyiṉ pēra.