கம்பராமாயணம் 5741a · சுந்தர 11.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காற்றின் செம்மல் காய் எரி - வாயுகுமாரனான அனுமன் பற்றி எரியும் தன்மையுள்ள நெருப்பானது; முளிபுல் கானில் கலந்தென - உலந்த புற்களின் தொகுதியில் சேர்ந்தாற்போல்; “ஏ” எனும் அளவில் - வெகு விரைவில்; கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை - கொல்லுகின்ற அரக்கர்களுக்கு ஒரு அளவு இல்லை; போயவர் உயிரும் - போருக்குச் சென்ற அவ் அரக்கர்களின் உயிர்களும்; தென்புலம் போகி படர்தல் பொய்யாது - தென் திசையாகிய யமனுலகு போய்ச் சேருதல் தவறாது; நமனுக்கு - (இவ்வாறு இறந்த உயிர்களை எல்லாம் கொண்டு போவதற்கு) யமனுக்கு; ஆயிரம் கோடி தூதர் உளரோ ? - ஆயிரம் கோடி தூதர்கள் உள்ளார்களோ?
காய் எரி, அனுமனுக்கும், 'முளிபுல் கான்” அரக்கர்களுக்கும் உவமையாக வந்தன. அம்மா; வியப்பை உணர்த்தும் இடைச்சொல் கொல் - ஐயம். ஓ - வினா.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a blazing fire that has got into a forest of dry grass, the noble son of the Wind
- killed demons beyond all limit in the time it takes to say 'ē';
- the lives of those who went would surely journey to the southern realm;
- has Namaṉ a thousand crore messengers, then?
What the poem says
Aṉumaṉ kills demons in countless numbers in an instant, like fire sweeping through dry grass. The souls of the dead will all make their way south to the realm of Yama, and the poet wonders whether Yama has ten thousand million messengers to fetch them all.
In the Tamil, ammā marks wonder, kol doubt, and ō a question.