கம்பராமாயணம் 5741c · சுந்தர 11.28

Section சுந்தர காண்டம் / 11. அக்ககுமாரன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐந்து புலன்களையும் வென்ற அனுமன்; வள்ளப்பட்டன மகரக்கடல் மதிள் எனச் சுற்றிய பதி - மகர மீன்கள் நிறைந்துள்ள வளம் பெற்ற கடல் அரணாகும்படி சூழ்ந்திருக்கும் இலங்கை நகரத்தில் உள்ள; உயிர் - பிராணிகள் யாவும்; மறலிக்கு ஓர் கொள்ளைப் பட்டன என்னும்படி - யமனுக்குப் பெருங் கொள்ளையில் அகப்பட்டுள்ளன என்று (கண்டவர்) கூறுமாறு; நுதல் ஓடைக் கரி - நெற்றிப்பட்டம் அணிந்த யானைகளும்; பிறழ் பொன் தேர், பரி - குப்புற்று விழுந்த அழகிய தேர்களும் குதிரைகளும்; பிள்ளப்பட்டன - சிதைக்கப்பட்டன; அள்ளப்பட்டு அழிகுருதி பொரு புனல் ஆறு ஆக - (வருகின்ற பிராணிகள் எல்லாம்) வாரி எடுக்கப்பட்டு அழிந்த (அரக்கர்களுடைய) மோதும் இரத்த வெள்ளமாகிய நீர் ஆறாய் ஓடவும்; படி சேறு ஆக - அதனால் பூமி சேறாக ஆகவும்; பிழையாமல் கொன்றான் - எவரும் தப்பிப் போகாமல் கொன்று அழித்தான்.

சிதைக்கப்பட்ட படையின் குருதி, ஆறாகவும், உடல் முதலியன ஆற்றினடியில் படியும் சேறாகவும் காணப்பட்டன. 'நெறிநின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்' (5253) என அனுமனைப் பிராட்டி கணித்ததை உருக்காட்டு படலத்தில் கம்பர் குறித்திருப்பது நினைவு கூரத்தக்கது. வள் - வளம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephants with brow-plates on their foreheads, overturned golden chariots and horses were split apart; without one escaping,
  2. as the blood of those scooped up and destroyed became a pounding river, and the earth became mud,
  3. so that one would say the lives in the city ringed by the rich makara-filled sea as by a wall
  4. had become a great plunder for Death, he slew them, he who had conquered the five senses.

What the poem says

Aṉumaṉ, who has mastered his five senses, leaves no one alive. Elephants, chariots and horses are torn apart; the blood forms a river and the flesh turns the ground to mud. It is as if Laṅkā, protected by the sea like a wall, has become a great haul of loot for Yama.

Earlier Cītai herself praised Aṉumaṉ as one who had conquered the five senses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piḷḷappaṭṭaṉa nutal ōṭaik kari, piṟaḻ poṉ tēr, pari, piḻaiyāmal,
aḷḷappaṭṭu aḻi kurutip poru puṉal āṟāka, paṭi cēṟu āka,
vaḷḷappaṭṭaṉa makarak kaṭal eṉa matil cuṟṟiya pati maṟalikku ōr
koḷḷaippaṭṭaṉa uyir eṉṉumpaṭi koṉṟāṉ aim pulaṉ veṉṟāṉē!