கம்பராமாயணம் 5753d · சுந்தர 12.12d
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செம்பொனின் தேரின் பாங்கர்ச் - செம்பொன்னால் ஆகிய தேரின் பக்கத்தில்; செங்குடைத் தொங்கற்காடும் - சிவந்த குடைமாலைகளின் கூட்டமும் (அதனைச் சார்ந்து); உம்பரின் கொம்பர் ஒத்த - தேவர் உலகத்துக் கற்பகக் கொம்பினை ஒத்த; ஒரு பிடி நுசுப்பின் - ஒப்பற்ற கைப்பிடி அளவே உள்ள இடையையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்; வம்பு அவிழ் குழலினார்கள் - மணம் விரியும் (மலரணிந்த) கூந்தலையும் உடைய மகளிர்; சாமரை பதைத்து வீச - கவரிகளைக் கொண்டு துடிக்கும்படி வீச; கொம்பு, கோடு, தாரை - கொம்பு முதலிய வாத்திய விசேடங்கள்; குடர் பறித்து ஊத - கேட்போர் குடலைப் பறித்தாற் போல் பேரொலியவாய் ஊதப்பெற; வந்தான் - (இந்திரசித்து) வந்தான்.
செம்பொன்தேர், செங்குடை மாலைக்காடு, மகளிர் வீசும் வெண்சாமரை என்று மாறுபட்ட வண்ணக் கலவையின் நடுவே வருவதாகப் புனைந்துரைத்தார். ஊதுவோர் காற்றை வயிற்றிலிருந்து மேல் கொண்டு வந்து ஊதலின் “குடர் பறித்து” என்பதை அவர்க்கே ஆக்கினும் தவறில்லை. பிடி நுசுப்பின் - கைப்பிடி அளவான இடை இங்கே “பிடி” என்பது யானை எனக்கூறின் அது நுசுப்பைப் பெரிதாக்கி விடும் ஆதலின் “கொம்பர் ஒத்த ' என்ற முன் உவமைக்கு ஏலாதாம். பிடி யானையாயின வழி நடைக்கே உவமையாம் ஆதலின். எண் ஒடு ஒருவழி நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beside his chariot of red gold, with a forest of red umbrellas and garlands,
- women like boughs of the heavenly tree, with waists a handspan round and red lips,
- and fragrant blossoming hair, waving fly-whisks briskly,
- and horns, trumpets and long pipes blown as if tearing out the guts, he came.
What the poem says
Intiracittu rides in a red-gold chariot shaded by red umbrellas hung with garlands. Beautiful women with tiny waists, red lips and flower-scented hair wave white fly-whisks beside him, and horns and trumpets blare so loud they seem to wrench the listeners' insides.
The commentary notes the contrast of colours and explains that the 'handspan' waist means a fist's width, not an elephant.