கம்பராமாயணம் 5753c · சுந்தர 12.12c

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீயினில் - நெருப்பைப்போல; செவ்வே வைத்து - நன்றாகப் பொருத்தி வைத்து; வேறு வேறு சின்னங்கள் - வெவ்வேறான ஊது கொம்புகளை; வாயினில் ஊதுவீரர் - வாயில் வைத்து ஊதுகின்ற வீரர்கள்; வழியிடம் பெறாது செல்ல - செல்லுதற்கு வழி கிடைக்காமல் அரிதின் செல்ல (இக்காட்சியை); தாயவள் சொல் மறாது தவம் புரிந்து அறத்தின் நின்ற நாயகன் தூதன் தானும் - தன் தாயான கைகேயி சொன்ன சொல்லை மறுக்காமல் தவம் செய்து துறவறத்தில் நின்ற இராமபிரானது தூதனாகிய அனுமானும்; நோக்கினன் - கண்ணாலும் கருத்தாலும் பார்த்தான்; நகையும் கொண்டான் - (போர் மிகக் கிடைக்க இருக்கிறது என்பதனால்) சிரிப்பும் கொண்டான்.

சின்னம் - ஊதுகொம்புகள். திருச்சின்னம் என்று கூறுவது வழக்கு. இவற்றின் ஒலி கேட்போர் காதில் தீப்போலப் பாய்கிறது எனலும் ஒன்று. “தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம் மேற்கொண்டு ” (கம்ப. 1601) என்பது தாய் கூறிய வார்த்தை ஆதலின் அதனை மேற்கொண்டு தவம் புரிந்து அறத்தின் நின்ற நாயகன் இராமன் ஆனான். போர் பெற்றால் வீரர் மகிழ்வர் இந்திர சித்துவின் போர் ஆரவாரப் புறப்பாடு கண்ட அனுமனுக்கு அது மகிழ்ச்சியை உண்டாக்கி நகையைத் தோற்றுவித்தது. தான் - உரையசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the warriors who set their various horns firmly, like fire,
  2. to their mouths and blew them moved on, finding no room to pass,
  3. the messenger of the lord who, never going against his mother's word,
  4. did penance and stood firm in righteousness, looked on, and smiled.

What the poem says

Horn-blowers crowd the road, their trumpets blaring like fire in the ears. Aṉumaṉ, envoy of Irāmaṉ, who obeyed his stepmother Kaikēyi's command, took up the hermit's life and held fast to dharma, watches the parade and smiles, pleased that a real battle is coming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyiṉil cevvē vaittu, ciṉṉaṅkaḷ vēṟu vēṟu
vāyiṉil ūtu vīrar vaḻiyiṭam peṟātu cella,
tāyavaḷ col māṟātu tavam purintu aṟattiṉ niṉṟa
nāyakaṉ tūtaṉ tāṉum, nōkkiṉaṉ; nakaiyum koṇṭāṉ.