கம்பராமாயணம் 5754 · சுந்தர 12.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கார் அரக்கர் தானை - கருநிறமுள்ள அரக்கர்கள் கூடிய சேனை; உடைந்த வல் இருள் - முன்பு சூரியனுக்குத் தோற்ற வலிய இருட்டு; நோற்று - (சூரியனை வெல்லும் பொருட்டு) தவம் செய்து; பல் உருக்கொடு - (அத் தவத்தின் பயனாக) கரிய பல உருவங்களைக் கொண்டு; அக்கதிர் குழாங்கள் - அச்சூரியனது கிரணங்களின் கூட்டங்களை (தான் வென்று கவர்ந்து); மிடைந்தன - நெருக்கமுள்ளனவாக; மிலைச்சி ஆங்கு - (தான் வென்றமைக்கு அடையாளமாக) அணிந்து கொண்டது போல; மெய் அணி பலவும் மின்ன - (இருள் மயமான தம்) உடம்பில் பூண்ட ஆபரணங்கள் மின்னவும்; வெம் பகைவர் ஊன் குடைந்து - கொடிய பகைவருடைய உடலில் முழுக; தோய் கொற்ற போர் வாள் - அந்த ஊன் படிந்தனவும், வெற்றியைத்தரும் போரைச் செய்ய வல்லனவுமான வாளாயுதங்கள்; வில்வீச - ஒளியை வீசவும்; அகலிடம் இடம் இன்று - நில உலகம் இடம் போதாது; என்ன - என்று சொல்லும்படி; அடைந்த - (இந்திர சித்தை) அடைந்து வந்து கூடிற்று.
கரிய அரக்கர் ஒள்ளிய அணிகளைப் பூண்டிருந்தது, சூரியனுக்குத் தோற்ற வலிய இருள், தவம் செய்து பல வடிவம் கொண்டு சூரியனை வென்று அவனது கதிர்க்கற்றைகளைத் தன் மேனியில் அணிந்து கொண்டது போன்றிருந்தது. இத்தகைய அரக்கர் சேனை, மிகுதியாக இந்திர சித்தை வந்து கூடிற்று என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the mighty darkness once routed had done penance, taken many forms, and those hosts of sunbeams,
- packed close, had worn them as a garland, so the many ornaments on their bodies glittered;
- with victorious battle swords that bored into fierce foes and were steeped in their flesh flashing light,
- the army of dark demons arrived, so that the wide earth seemed to have no room.
What the poem says
Kampaṉ's own verses resume with a striking image. The black-skinned demons, glittering with jewels, look like darkness itself, which was once defeated by the sun, had done penance, taken countless bodies, beaten the sun in turn and put on its rays as trophies.
With flesh-stained swords flashing, this army gathers round Intiracittu in such numbers that the earth seems too small to hold it.