கம்பராமாயணம் 5761 · சுந்தர 12.20

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீப்பு உண்ட உயிர ஆகி, நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி,
ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய பிணக் குவடு, இடறச் செல்வான்;
தேய்ப்பு உண்ட தம்பி யாக்கை, சிவப்பு உண்ட கண்கள், தீயில்
காய்ப்பு உண்ட செம்பில் தோன்றக் கறுப்பு உண்ட மனத்தன் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

நீப்பு உண்ட உயிர ஆகி - நீங்குதல் அடைந்த உயிரை உடையவாய்; நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி - நெருப்பை ஒத்த நிறமுடையனவாய்க் காணப்பட்டு; ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய - இழுக்கப்படுதற்குக் கூடாதனவான; பிணம் குவடு இடற செல்வான் - பிணங்களாகிய மலைகள் தட்டித் தடுக்க போர்க்கள வழியே செல்பவனான இந்திரசித்து; தேய்ப்பு உண்ட - (அனுமனால்) தேய்க்கப்பட்ட; தம்பி யாக்கை - தன் தம்பி அக்க குமாரனுடைய உயிர் நீத்த உடலை; சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்புண்ட செம்பிற் தோன்ற - (சினத்தினால்) செந்நிறம் கொண்ட தன் கண்கள் நெருப்பில் காய்ச்சப்பட்ட செம்புபோல் விளங்க; கறுப்புண்ட மனத்தன் கண்டான் - கோபம் கொண்ட மனத்தினனாகப் பார்த்தான்.

இந்திரசித்து, உயிர்நீத்துக் கிடந்த தன் தம்பியின் உடலைப் பார்த்து, தேய்த்தவன் ஆகிய அனுமன் மேல் கோபம் கொண்டான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bodies whose life had fled, looking the colour of fire,
  2. hills of corpses too heavy to drag, tripped him as he went;
  3. he saw his brother's body, ground to nothing, his reddened eyes
  4. glowing like copper heated in fire, his heart blackened with rage.

What the poem says

Picking his way among mountains of blood-red corpses that block his path, Intiracittu comes upon the body of his brother Akkakumāraṉ, whom Aṉumaṉ had smashed against the ground.

His eyes glow like copper in a furnace, and his heart turns black with anger against the one who did this.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīppuṇṭa uyira, āki neruppuṇṭa niṟattil tōṉṟi,
īrppuṇṭaṟku ariya āya piṇak kuvaṭu, iṭaṟac celvāṉ;
tēyppuṇṭa tampi yākkai, civappuṇṭa kaṇkaḷ, tīyil
kāyppuṇṭa cempiṉ tōṉṟak kaṟuppuṇṭa maṉattaṉ kaṇṭāṉ.