கம்பராமாயணம் 5760 · சுந்தர 12.19

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் - தண்டக வனத்திடத்து என் அத்தையாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்த மூக்கு முதலியன அறுப்புண்ட குறைபாடும்; கரனார் பாடும் - கரன் இறந்ததும்; யானுடை எம்பி வீந்த இடுக்கணும் - என்னுடைய தம்பி அக்க குமாரன் அழிந்த துன்பமும்; பிறவும் எல்லாம் - மற்றைய (அசோகவனம் அழிந்தமை முதலியனவுமான) யாவும்; மானிடர் இருவராலும் - இரண்டு மனிதர்களாலும்; வானரம் ஒன்றினாலும் - ஒரு குரங்கினாலும்; ஆனிடத்து - உண்டாயின என்றால்; என் உள வீரம் - என்னிடத்து உள்ள வீரம்; அழகிற்றே - அழகுடையதே!; அம்ம! என்றான் - என்ன ஆச்சரியம் என்று (இந்திரசித்து) கூறினான். “இவ்வளவு துன்பமும், இருமானிடர்களாலும், ஒரு குரங்கினாலும் நேர்ந்தது என்றால், என் வீரம் அழகிற்றே” என்று இகழ்ச்சிக் குறிப்புடன் பேசினான் இந்திரசித்து. ஆனிடத்து - உண்டாயின என்றால். ஆயின இடத்து என்பது ஆனிடத்து எனத் தொக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The wrong done to my aunt in the forest, the death of Karaṉ,
  2. the grief of my own younger brother's fall, and all the rest:
  3. if these came about through two men and a single monkey,
  4. how splendid indeed is my valour!" he said.

What the poem says

Intiracittu lists the disgraces his family has suffered: his aunt Cūrppaṇakai mutilated in the Taṇṭaka forest, Karaṉ killed, his younger brother Akkakumāraṉ slain, the grove laid waste.

All this has been done by two men and one monkey, and he mocks himself bitterly: what fine valour he must have, to let it happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṉiṭai attaikku uṟṟa kuṟṟamum, karaṉār pāṭum,
yāṉuṭai empi vīnta iṭukkaṇum piṟavum ellām
māṉiṭar iruvarālum vāṉaram oṉṟiṉālum
āṉiṭattu uḷa, eṉ vīram aḻakiṟṟē amma eṉṟāṉ.