கம்பராமாயணம் 5759 · சுந்தர 12.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண் அனார் - கண்போன்று அருமையானவரும்; உயிரே ஒப்பார் - தன் உயிர் போன்றவரும்; கைப்படைக்கலத்தின் காப்பார் - தாம் தாம் கைதேர்ந்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, தம்மவர்களைக் காப்பவரும்; எண்ணல் ஆம் - நினைத்தற்கும் இயலாத; தகைமை இல்லார் - பெருமையுடையவருமாகி; இறந்து - அனுமனால் உயிர்நீத்து; இடை கிடந்தார் தம்மை - அவ்விடத்திலே விழுந்து கிடந்த அரக்க வீரர்களை; மண்ணுளே நோக்கி நின்று - போர்க்களத்திலே பார்த்து நின்று; வாய் மடித்து உருத்து - உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு கோபித்து; மாயாப் புண்ணுளே கோல் இட்டு அன்ன - ஆறாத புண்ணிலே கோலைக் கொண்டு குத்தினாற் போல; மானத்தால் புழுங்குகின்றான் - அவமானத்தால் (இந்திரசித்து) (உடலும் உள்ளமும்) கொதிக்கின்றவனானான்.
பல சிறப்பிற்கு உரிய வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது, இந்திரசித்தன் மனம் மிகவும் வருந்தியது. அவ்வருத்தம் புண்ணில் கோல் நுழைந்தால் போன்று ஆயிற்று என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those dear as his eyes, like his very life, who guarded others with the weapons in their hands,
- whose worth was beyond all reckoning, lay dead there among the rest;
- seeing them on the ground he stood, biting his lip, in fury;
- as if a stick had been thrust into an unhealing wound, he burned with wounded pride.
What the poem says
Among the fallen Intiracittu recognises warriors as precious to him as his own eyes and life, men who protected others with their weapons and whose worth was beyond measure.
He bites his lip in anger. The sight hurts him like a stick jabbed into an open wound, and he seethes at the humiliation.