கம்பராமாயணம் 5758 · சுந்தர 12.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெப்பு அடைகில்லா நெஞ்சில் - (இதுவரை வருத்தத்தால்) தவிப்பு அடையாத தனது உள்ளத்தில்; சிறியது ஓர் விம்மல் கொண்டான் - ஒரு சிறு ஏக்க உணர்ச்சி கொண்டான் (மற்றும்); அப்பு அடை வேலை - நீர் நிறைந்த கடல் போன்ற; அன்ன பெருமையோர் - (அளக்க ஒண்ணாப்) பெருமை உடையவர்களும்; ஆற்றலோடும் ஒப்பு அடைகில்லார் - தம் வல்லமையுடன் ஒப்புமை அடையப் பெறாதவர்களுமான; எல்லாம் உலந்தனர் - அரக்கவீரர்கள் யாவரும் (இப்போரில்) அழிந்தனர்; குரங்கும் ஒன்றே! - (இவ்வளவு வீரர்களையும் கொன்ற) குரங்கும் ஒன்றேதான் உள்ளது; இராமன் வந்து எதிர்க்கின் - (இனி மற்ற வானரங்களுடன்) இராமன் வந்து நம்மை எதிர்த்துப் போர் புரிந்தால்; எப்படை கொண்டு வெல்வது? என்றான் - எந்தப் படைகளைக் கொண்டு எதிர்த்து வெற்றி கொள்வது? என்றும் சிந்தை கொண்டான். போரில் வல்ல பலரையும் கொன்ற அனுமனைக் கண்டு வியந்த மேகநாதன் இது போன்ற வானர வீரர்களுடன் இராமன் வந்து போர் செய்தால் வெல்வது எப்படி என்று சிந்தனை செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a heart that had never known distress, he felt a small sob rise;
- "Those as great as the sea that holds the waters, whom none could match
- in strength, have all perished; and the monkey is only one!
- With what army are we to win, if Irāmaṉ comes against us?" he said.
What the poem says
Intiracittu, whose heart has never known anxiety, feels the first stirring of unease. Champions vast as the ocean, unequalled in strength, all lie dead, and this was the work of a single monkey.
He looks ahead: if Irāmaṉ comes with an army of such monkeys, what force could ever defeat him?