கம்பராமாயணம் 5757 · சுந்தர 12.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலைகுலாம் பூணினானும் - இலை வடிவமாகச் செய்த அணிகளை அணிந்த இந்திர சித்தும்; பெரும் போர்க்களம் - அந்தப் பெரும் போர்க்களமானது; இரும்பிணம் - போரில் இறந்த அரக்கர்களது பெரும் பிணங்களின்; குருதி ஈர்த்து - இரத்த வெள்ளத்தில்; அலகு இல் வெம்படைகள் - அளவில்லாத கொடிய ஆயுதங்கள்; தெற்றி - அலைக்கப் பெறுதலால்; அளவு இடற்கு அரிய ஆகி - அளவிட்டுக் கூற முடியாதனவாகி; மலைகளும் கடலும் - மலைகளையும், கடல்களையும்; யாறும் கானமும் - ஆறுகளையும், காடுகளையும்; பெற்று - தன்னிடம் அமையப் பெற்று; மற்றும் ஓர் உலகமே - வேறு ஓர் உலகமே போல; ஒத்தது என்று உன்னா - பரந்துடெந்தது என்று கருதி. அம்மா, வியப்பை உணர்த்தும் இடைச்சொல். “விம்மல் கொண்டான்” என்று அடுத்த கவியின் தொடரோடு முடியும். பிணங்கள் மலைகளாகவும், இரத்தம் கடலாகவும் ஆறாகவும், ஆயுதங்கள் காடாகவும் தோற்றம் அளித்தன. அதுகண்டு மற்றும் ஓர் உலகமே என்று வியந்தான் மேகநாதன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- And he of the leaf-shaped ornaments, thinking, "With its blood dragging huge corpses along,
- with countless cruel weapons tangled in it, grown past all measuring,
- holding mountains and seas and rivers and forests, it is like
- another world entire, ah, this great field of battle!"
What the poem says
Intiracittu surveys the battlefield where Aṉumaṉ has slaughtered the earlier forces, and it looks to him like a whole new world: heaps of corpses for mountains, pools and streams of blood for seas and rivers, and masses of broken weapons for forests.
The sentence runs on into the next verse, where his reaction is completed.