கம்பராமாயணம் 5763 · சுந்தர 12.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எந்தாய் - எனது ஐயனே!; வெவ் இலை அயில் வேல் உந்தை - கொடியதும் இலை போன்ற முனையுடையதும் கூர்மை உடையதும் ஆன வேலாயுதத்தை ஏந்திய உனது தந்தையின் (இராவணனது); வெம்மையை கருதி நோக்கி - கோபத்தை ஆலோசித்துப் பார்த்து; கூற்றும் வவ்வுதல் ஆற்றான் - யமனும் (உனது உயிரைக்) கவரவல்லன் அல்லன்; மாறுமாறு உலகின் வாழ்வார் - மற்றும் வெவ்வேறு உலகங்களில் வாழ்பவரான; அவ் உலகத்து உளாரும் ஒளிக்க அஞ்சுவர் - அந்தந்த உலகத்தில் உள்ளவர்களும் உன்னை மறைத்து வைக்க பயப்படுவார்கள்; எம்மை எளிதின் நீத்து - எம்மை எளிதாக விட்டு; எவ் உலகத்தை உற்றாய் - நீ வேறு எந்த உலகத்தைப் போய் அடைந்தாய்? (என்று சொல்லி இந்திர சித்து புலம்பினான்.)
இராவணனுக்கு அஞ்சி, யமனும் அக்கனது உயிரைப் பறிக்க மாட்டான். மற்றைய உலகினரும் அவ்வாறே அச்சத்தால், அக்கனை மறைக்க மாட்டார்கள். அப்படியிருக்க, நீ எந்த உலகத்தில் மறைந்தாய் என்று தனது தம்பியை நினைத்து வருந்தி இந்திர சித்து புலம்பினான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Think of the fury of your father with his cruel, leaf-bladed, keen spear, and see:
- Death himself could not have seized you; and those who live in world after world,
- the dwellers in each of those worlds, would be afraid to hide you; my lord,
- to what world have you gone, leaving us so lightly, my dear one?"
What the poem says
Intiracittu laments over his brother. Out of fear of their father Irāvaṇaṉ, Death would never dare take Akkakumāraṉ's life, and the people of no world would dare shelter him.
So where can he have gone, abandoning his family so easily? The grieving brother speaks as if the dead boy had simply wandered off and could not be found.