கம்பராமாயணம் 5764 · சுந்தர 12.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆற்றலன் ஆகி - உடன்பிறப்பை இழந்ததனாலான துக்கத்தைப் பொறுக்க மாட்டாதவனாய் (இந்திரசித்து); அறிவு அழிந்து - அறிவு மயங்கி; அன்பால் அயரும் வேலை - தம்பிபால் தான் கொண்ட அன்பினால், தளர்ச்சியுற்று வருந்தும்போது; சீற்றம் என்று ஒன்றுதானே - கோபம் என்ற ஒரு குணமே; மேல் நிமிர் - மேன்மேல் பொங்கி எழும்; செலவிற்று ஆகி - தன்மை உடையதாய்; ஏற்றம் சால் ஆணிக்கு - நன்றாய் உள் நுழைந்த ஓர் ஆணிக்கு; எதிர் செல ஆணி கடாயது என்ன - அது பின்வாங்கிச் செல்ல மற்றோர் ஆணியைத் தாக்கி அடித்தது போல; தோற்றிய துன்ப நோயை - மனத்தினுள் தோன்றிய துன்பம் என்ற நோயை; உள் உற துரந்தது - உள்ளே அடங்கும்படி செலுத்தி அடக்கி விட்டது; அம்மா! - ஆச்சரியம். இதனால், இந்திரசித்து கொண்டிருந்த துயரத்தை அவனது கோபம் எதிர்கொண்டு தாக்கி அழியச் செய்தது என்பதாம். இது, ஓரிடத்தில் ஆணியின் மேல் ஆணியை அடித்தால், பிந்தி அடிக்கும் ஆணி முந்தி அடிக்கப்பட்டுள்ள ஆணியை உள்ளே செலுத்தி விடுதல் போன்றது. இதனுள், சோகத்தை வீரம் மாற்றியது கூறப்பட்டது. ஒரு சுவையை, மற்றொரு சுவை மாற்றும் இயல்பு தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he sank, unable to bear it, his reason undone by love,
- rage, that one thing alone, rose up, surging ever higher,
- and drove deep down the sickness of grief that had arisen; ah,
- it was as when a nail is hammered against a well-sunk nail to drive it in.
What the poem says
While Intiracittu is still overwhelmed by sorrow, anger rises in him and pushes the grief down, the way a second nail hammered onto a first drives the first one deeper into the wood.
The verse shows one emotion displacing another: grief gives way to the heroic mood of wrath, and the mourning brother becomes a warrior again.