கம்பராமாயணம் 5884 · சுந்தர 13.80

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கடந்து நின்ற காரணன், கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்.

பொருள் · Meaning in Tamil

மூலமும் நடுவும் ஈறும் இல்லது - முதலும் நடுவும் முடிவும் இல்லாதது என; ஓர் மும்மைத்து ஆய காலமும் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என இலக்கண முறையால் வகுத்துக் கூறப்படும் மூன்று காலங்களையும்; கணக்கும் - இவ்வளவினது என்று கணித நூலால் கூறப்படும் எண்ணிக்கையையும்; நீத்த காரணன் - கடந்து நின்ற (எல்லாப் பொருள்களுக்கும்) காரணனாய அந்த முழுமுதல் பொருள்தான்; சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து - சூலத்தையும், சக்கரம் சங்கு ஆகியவற்றையும், கமண்டலத்தையும் (தன் கையில் கொள்ளாது) விட்டு; கை வில் ஏந்தி - கையில் வில்லை ஏந்திக் கொண்டு; தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு - பழமையாகத் தனக்கு உரிய இடங்களாகிற ஆலிலையையும் தாமரை மலரையும் கைலாயமலையையும் இடமாகக் கொள்ளாது விட்டு; அயோத்தி வந்தான் - அயோத்தி மாநகரில் இராமபிரானாக அவதரித்தான். காலம் நித்தியமானது என்பதை உணர்த்துகின்றது “மூலமும் நடுவும் ஈறும் இல்லது” என்ற தொடர். கணக்கு - கணித நூலார் கூறும் எண்ணிக்கை அளவு. மும்மைத்தாய காலம் - இலக்கண நூலார் கூறும் இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற கால

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Time, which has no beginning, middle or end, yet is threefold,
  2. and all number too, the Cause who transcends them, taking a bow in his hand,
  3. giving up the trident, the discus and conch, and the water-pot, and leaving the ancient
  4. banyan leaf, the flower and the silver mountain, came to Ayōttī."

What the poem says

Aṉumaṉ declares Irāmaṉ to be the First Cause beyond time, which is endless yet divided into past, present and future, and beyond all number.

He is Śiva, Viṣṇu and Brahmā in one. He has set aside the trident, the discus and conch, and the water-pot that are their emblems, left their ancient seats, Viṣṇu's banyan leaf, Brahmā's lotus and Śiva's silver mountain, taken up a bow instead, and been born in Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūlamum naṭuvum īṟum illatu ōr mummaittu āya
kālamum kaṇakkum nītta kāraṇaṉ, kaivil ēnti
cūlamum tikiri caṅkum karakamum tuṟantu, tollai
ālamum malarum veḷḷip poruppum viṭṭu, ayōtti vantāṉ.