கம்பராமாயணம் 5883 · சுந்தர 13.79

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காரணம் கேட்டி ஆயில், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னோன்;
போர் அணங்கு இடங்கர் கவ்வப் பொதுநின்று'முதலே'என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்.

பொருள் · Meaning in Tamil

காரணம் கேட்டி ஆயின் - அந்த முழுமுதற் பொருள் ஒரு அரசனுக்கு மகனாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன வென்று கேட்பாயானால்; கடை இலா மறையின் கண் ஆரணமும் - முடிவில்லாத (அனந்தமான) வேதங்களிடத்துள்ள உபநிடதங்களும்; காட்டமாட்டா - இவன் இத்தன்மையன் என்று முழுவதும் அறிவிக்க முடியாதவனும்; அறிவுக்கு அறிவும் அன்னோன் - எல்லாப் பொருள் தன்மைகளையும் அறிகின்ற அறிவானவனும் ஆகிய பரம்பொருள்; போர் அணங்கு இடங்கர் கவ்வ - (அன்று) போரிட்டு எதிர்த்துத் துன்பத்தைத் தரும் முதலை கவ்விக்கொள்ள, (அதனால் வருந்தி); பொதுநின்று முதலே என்ற - (இன்ன கடவுள் என்று பெயர் குறிப்பிடாமல்) பொதுப் பட ஆதிமூலமே என்று கூவி அழைத்து நின்ற; வாரணம் காக்க வந்தான் - யானையை (கஜேந்திரனை) பாதுகாப்பதற்கு ஓடி வந்தான்; அமரரைக் காக்க வந்தான் - (இன்று) தேவர்களைப் பாதுகாப்பதற்கு அவதரித்துள்ளான். கடை இலா மறையின் ஆரணமும் காட்ட மாட்டாதவனும், அறிவினுக்கு அறிவும் அன்னோனுமாகிய பரம் பொருளே, அன்று, வாரணம் காக்க வந்தான், இன்று (இப்பொழுது) அமரரைக் காக்க வந்தான் என்று இராவணனுக்கு அனுமான் உணர்த்தினான் என்க. ஆரணம் - வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதம். காட்டுதல் - அறிவித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If you ask the reason: he whom even the Upaniṣads of the endless Vedas
  2. cannot reveal, he who is the very knowing within all knowing,
  3. he who, when a fierce crocodile seized it and, naming no god, it cried out 'O First Cause!',
  4. came to save that elephant, has come to save the gods."

What the poem says

Why should the Supreme be born as a king's son? Aṉumaṉ explains that he is the one the Upaniṣads themselves cannot fully describe, the awareness behind all awareness.

Long ago, when a crocodile seized the elephant Gajendra and the elephant called out simply "O First Cause!" without naming any god, he came running to save it. In the same way he has now come to save the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāraṇam kēṭṭi āyiṉ, kaṭai ilā maṟaiyiṉ kaṇṇum
āraṇam kāṭṭa māṭṭā aṟiviṉukku aṟivum aṉṉōṉ;
pōr aṇaṅku iṭaṅkar kavvap potuniṉṟu'mutalē'eṉṟa
vāraṇam kākka vantāṉ amararaik kākka vantāṉ.