கம்பராமாயணம் 5882 · சுந்தர 13.78

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

போதமும் - மெய்ஞ்ஞானமும்; பொருந்து கேள்வி - அந்த ஞானத்தோடு பொருந்தியனவாய்க் கேட்கப்பட்ட நூற்பொருளின்; புரை அறு பயனும் - குற்றமற்ற நற்பயன்களும்; பொய் தீர் மாதவம் சார்ந்த - பொய்ம்மையில்லாத பெரிய தவத்தைச் செய்து பெறுகின்ற; தீரா வரங்களும் மற்றும் முற்றும் - நீங்காத வரங்களும் மற்றும் எல்லாம்; அவன் யாது நினைந்தான் அன்ன பயத்தன - அவன் என்ன நினைத்தானோ அவ்வாறு பயனளிக்கக் கூடியனவாய் அமைவன ஆயின; வில்லோன் - யான் கூறிய அந்த வில்வீரன்; வேதமும் அறமும் சொல்லும் மெய் அறமூர்த்தி - வேதமும் அறக்கடவுளும் புகழ்ந்து சொல்லும் உண்மைத் தருமசொரூபியான பரம் பொருளே ஆவான்.

போதம் முதலிய யாவும், பரம்பொருளாகிய கடவுளின் ஆணைப்படி நடப்பன என்பதும், அப் பரம் பொருளே இவ்வில்லோன் என்பதும், இவன் நினைத்த மாத்திரத்தில், இராவணன் பெற்றுள்ள சிறப்புக்கள் அனைத்தும் அழியும் என்பதும் இதனால் இராவணனுக்கு உணர்த்தப்பட்டன என்க. கேள்விப்புரை அறுபயன்கள் - நற்குண நற்செய்கைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "True knowledge, the flawless fruit of the learning heard along with it,
  2. the unfailing boons won by great penance free of falsehood, and all the rest besides,
  3. yield their fruit only as he wills; if you ask what he is,
  4. the bowman is the true embodiment of Dharma, of whom the Vedas and Dharma speak."

What the poem says

Aṉumaṉ goes further. Wisdom, the good that comes from learning and the boons earned by penance all take effect only as this bowman wills.

He is Dharma made flesh, the Supreme praised by the Vedas. The implication for Irāvaṇaṉ is plain: all the gifts he has won can be undone at a single thought from Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōtamum poruntu kēḷvip purai aṟu payaṉum poy tīr
mātavam cārnta tīrā varaṅkaḷum maṟṟum muṟṟum
yātu avaṉ niṉaintāṉ aṉṉa payattaṉa ētu vēṇṭiṉ
vētamum aṟaṉum collum mey aṟa mūrtti villōṉ.