கம்பராமாயணம் 5881 · சுந்தர 13.77

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரும் பிறரும் அல்லன்; திசை களிறு அல்லன்; திக்கில்
காவலர் அல்லன்; ஈசன் கயிலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
பூ வலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போல் ஆம்.

பொருள் · Meaning in Tamil

தேவரும் பிறரும் அல்லன் - (அந்த வில் வீரன்) தேவர்களும் மற்றை அசுரர்கள் முதலியோரும் அல்லன்; திசைக்களிறு அல்லன் - திக்கயங்களில் ஒன்றும் அல்லன்; திக்கில் காவலர் அல்லன் - திக்பாலகர்களில் ஒருவனும் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் - சிவபிரானுடைய கைலை என்னும் அழகிய மலையும் அல்லன்; மூவரும் அல்லன் - மும்மூர்த்திகளும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன் - மற்றைய முனிவர்களும் அல்லன்; எல்லை பூவலயத்தை ஆண்ட - பூமியின் எல்லை எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அரசாட்சி செய்த; புரவலன் புதல்வன் போலாம் - ஒரு பேரரசனுடைய குமாரனேதான் அவன்.

அந்த வில்வீரன், உன்னால் வெல்லப்பட்ட தேவர் முதலியோர் அல்லன்; வெல்லப்படாத ஒரு சக்கரவர்த்தியின் புதல்வன் என்றவாறு. இராவணனிடம் தோற்றவர்களும், தோற்றவைகளும், அவனை வெல்வதற்கு பழி வாங்குவதற்கு வேற்றுருவம் கொண்டு வந்தவன் அல்லன் இந்தவில் வீரன் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He is not one of the gods or the others; not an elephant of the quarters; not
  2. a guardian of the directions; not Īcaṉ's lovely Kailāsa mountain;
  3. not one of the Three; nor any of the sages; it seems
  4. he is the son of a king who ruled the round earth to its bounds."

What the poem says

Aṉumaṉ dismisses each of Irāvaṇaṉ's earlier victims. His master is not a god, an elephant of the directions, a guardian of the quarters, Mount Kailāsa, which Irāvaṇaṉ once lifted, or one of the three great gods or a sage, come in disguise to take revenge.

He is simply the son of an emperor who ruled the whole earth, one whom Irāvaṇaṉ has never defeated.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarum piṟarum allaṉ; ticaik kaḷiṟu allaṉ tikkil;
kāvalar allaṉ; īcaṉ kailai am kiriyum allaṉ;
mūvarum allaṉ; maṟṟai muṉivarum allaṉ; ellaip
pū valayattai āṇṭa puravalaṉ putalvaṉ pōlām.