கம்பராமாயணம் 5880 · சுந்தர 13.76

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈட்டிய வலியும் மேல் நாள் இயற்றிய தவமும் யாணர்க்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும்
தீட்டிய அறிவும் எய்தத் திருத்திய பிறவும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடும் நீக்க நின்றான்.

பொருள் · Meaning in Tamil

ஈட்டிய வலியும் - நீங்கள் தேடிச் சேர்த்துக் கொண்ட வலிமைகளையும்; மேல் நாள் இயற்றிய தவமும் - (முன் நாளில்) நீங்கள் செய்து வைத்துள்ள தவத்தின் வலிமையையும்; யாணர் கூட்டிய - புதிது புதிதாக நீங்கள் சேர்த்து வைத்துள்ள அரிய படைகளையும்; தேவர் கொடுத்த நல்வரமும் - தேவர்கள் உங்களுக்கு அளித்துள்ள நல்ல வரங்களையும்; கொட்பும் - (மற்றும்) நீங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும்; தட்டிய பிறவும் - (வெற்றித் தூண்களில்) நீங்கள் எழுதிவைத்துள்ள கீர்த்தி முதலிய பிறவற்றையும்; எய்தித் திருத்திய வாழ்வும் - நீங்கள் அடைந்து, பின்பு சீர்திருத்திக் கொண்ட அரச வாழ்வையும்; மற்றும் - உங்கள் தொடர்புடைய அனைத்தையும்; நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் - நீண்ட தன் அம்பு ஒன்றினால் அடியோடு அழிக்கச் சங்கற்பித்து நின்றவன் (அவன்)

“உங்கள் மாயவாழ்வெல்லாம் எங்கள் கோமானால் மாயும்” என்றான் அனுமன். வலி, தவம், படை, வரம், கொட்பு, முதலியனவாக இதிருத்தமுறப் பெற்ற வாழ்வு அனைத்தையும் பகழி ஒன்றால் நீக்க நின்றவன் (அவன்) என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The strength you have amassed, the penance you performed in days gone by, the forces
  2. you keep gathering anew, the fine boons the gods have granted, your glories,
  3. and all else you have inscribed, and the life you won and set in order, all of it
  4. he stands ready to wipe out, root and all, with a single long arrow."

What the poem says

Aṉumaṉ warns Irāvaṇaṉ that everything his power rests on, the strength he has amassed, his old austerities, his ever-growing armies, the boons the gods gave him, his fame and his well-ordered royal life, Irāmaṉ means to destroy at its root with one arrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṭṭiya valiyum mēl nāḷ iyaṟṟiya tavamum yāṇark
kūṭṭiya paṭaiyum tēvar koṭutta nal varamum koṭpum
taṭṭiya piṟavum eytit tiruttiya vāḻvum ellām
nīṭṭiya pakaḻi oṉṟāl mutaloṭu nīkka niṉṟāṉ.