கம்பராமாயணம் 5886 · சுந்தர 13.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவற்கு அடிமை செய்வேன் - சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்த அந்த இராமபிரானுக்கு அடிமைத் தொழில் செய்பவன் யான்; நாமமும் அனுமன் என்பேன் - பெயரும் அனுமன் என்று சொல்லப்படுவேன்; நல் நுதல் தன்னைத் தேடி - நல்ல நெற்றியை உடைய சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு; நால் பெரும் திசையும் போந்த மன்னரில் - நான்கு பெருந் திசைகளிலும் சென்ற தலைவர்களுள்; தென் பால் வந்த தானைக்கு மன்னன் வாலி தன் மகன் - தென் திசையில் வந்த சேனைக்குத் தலைவன் வாலியின் மகனாகிய அங்கதன்; அவன் தன் தூதன் தனியேன் வந்தனென் என்றான் - அவனது தூதனாய் நான் ஒருவன் இங்கு வந்தேன் என்று அனுமன் கூறினான். “அன்னவற்கு அடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்; வாலி தன் மகன் தூதன் வந்தனன்” என்று சொற் சுருக்கமாகக் கூறுதல் மூலம், அனுமன், தன்னையும், தான் வந்த காரியத்தையும் தெரிவித்துக் கொண்டு விட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I am a servant of that one; my name, I tell you, is Aṉumaṉ;
- of the chiefs who went out to the four great quarters in search of her of the fair brow,
- the lord of the army that came south is Vālī's
- son; his envoy am I, and I have come alone," he said.
What the poem says
Aṉumaṉ finally introduces himself in a few plain words. He is Irāmaṉ's servant, and his name is Aṉumaṉ.
Search parties went out in all four directions to look for Cītai; he belongs to the southern one, led by Aṅkataṉ, Vālī's son, and has come alone as its envoy. In one short speech he has said who he is and why he came.