கம்பராமாயணம் 5887 · சுந்தர 13.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றலும் இலங்கைவேந்தன் - என்று அனுமான்கூறியவுடன், இராவணன்; எயிறு இனம் - தனது பல்வரிசைகள்; எழிலி நாப்பண் மின் திரிந்து என்ன நக்கு - மேகங்களினிடையே மின்னல் உலாவினாற் போலச் சிரித்து, அனுமனை நோக்கி, வாலி சேய் விடுத்த தூத - வாலிமகன் அனுப்ப வந்த தூதனே !; வன் திறல் ஆயவாலி வலியன் கொல் - மிக்க வலிமை உடையவனான வாலி நலமும் வலிமையும் உடையவனாய் வாழ்கின்றானா ?; அரசின் வாழ்க்கை நன்று கொல் என்னலோடும் - அவனுடைய அரசாட்சி நன்கு நடைபெற்று வருகின்றதா ? என்று கேட்டவுடன்; நாயகன் தூதன் நக்கான் - அனைத்துக்கும் தலைவனான இராமபிரானது தூதனாகிய அனுமான் சிரித்தான்.
என்றலும், இலங்கை வேந்தன் நக்கு, வாலி சேய் விடுத்த தூத ! வாலி வலியன் கொல் ? நன்று கொல் ? என்னலோடும் தூதன் நக்கான் என்க. இராவணனும் நக்கான்; அனுமனும் நக்கான். இரண்டு சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு. ஒன்று கோப உணர்வால் வெளிப்பட்டது. மற்றொன்று ஏளனத்தால் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said this, the king of Ilaṅkai, his rows of teeth flashing
- like lightning wandering amid a cloud, laughed: 'Envoy sent by Vālī's son!
- Is Vālī of mighty strength still strong? Does his royal life
- go well?' At these words the Lord's messenger laughed.
What the poem says
Aṉumaṉ, bound and brought before Irāvaṇaṉ, has just named himself an envoy. Irāvaṇaṉ, assuming the monkeys are still ruled by his old acquaintance Vālī, mockingly asks after Vālī's health and kingdom; his laughter shows his teeth flashing like lightning in a dark cloud.
Two laughs meet in the verse: Irāvaṇaṉ's comes from anger, Aṉumaṉ's from scorn, since he knows what the demon king does not.