கம்பராமாயணம் 5888 · சுந்தர 13.84

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்க ! அஞ்சலை- இராவணனே ! பயப்படாதே; வெம்சின வாலி பார்விட்டு அந்தரம் அடைந்தான் மீளான்- கொடிய கோபத்தினனாய வாலியானவன் பூமியை விட்டு விண்ணுலகம் சேர்ந்தான் இனித்திரும்பி வரமாட்டான்; அன்றே வாலும் போய் விளிந்தது - அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது; அஞ்சன மேனியான் தன் அடு கணை ஒன்றால் - மை போன்ற கருநிறம் உடைய இராமபிரானது பகையை அழிக்கவல்ல அம்பு ஒன்றினால்; மாழ்கி துஞ்சினன் - வருந்தி இறந்தான்;

எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் - (இப்போது) எங்களுக்கு அரசன் சூரியகுமாரனான சுக்கிரீவன் என்று கூறினான். (அனுமன்); அன்று, ஏ- அசைநிலைகள்.

வாலியின் மரணத்தைக் கூறுதலின் மூலம், இராமபிரானது வில்லாற்றலையும் இராவணனுக்கு உணர்த்தி விட்டான் அனுமன் இதில், எள்ளல் சுவையும் நகைச்சுவையும் அமைந்துள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fear not, demon! Leaving the earth, he has gone to the sky,
  2. fierce-angered Vālī, and will not return; his tail too is gone, perished that very day;
  3. struck by a single slaying arrow of the one whose body is dark as collyrium,
  4. he sank and died. Our king is the son of the Sun,' he said.

What the poem says

Aṉumaṉ answers with irony: Irāvaṇaṉ need not worry about Vālī, who is dead. The tail mentioned is a barb, since Vālī had once bound Irāvaṇaṉ in his tail; that tail is now gone too.

By telling how Vālī fell to one arrow of dark-bodied Irāmaṉ, Aṉumaṉ also lets Irāvaṇaṉ know the power of Irāmaṉ's bow. The present monkey king is Cukkirīvaṉ, son of the Sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'añcalai, arakka! pārviṭṭu, antaram aṭaintāṉ aṉṟē
veñciṉa vāli, mīḷāṉ; vālum pōy viḷintatu; aṉṟē,
añcaṉa mēṉiyāṉ taṉ aṭukaṇai oṉṟāl māḻkit
tuñciṉaṉ, eṅkaḷ vēntaṉ cūriyaṉ tōṉṟal'eṉṟāṉ.