கம்பராமாயணம் 5889 · சுந்தர 13.85

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராமன் என்பான். (அதுகேட்ட இராவணன்) இராமன் என்பவன்; என்னுடை ஈட்டினால் - எந்த வகையால் பெற்ற வலிமை கொண்டு; அவ்வாலியை - அந்த வாலியை; எறுழ்வாய் அம்பால் இன் உயிர் உண்டது - வலிய நுனியை உடைய அம்பால் அவன் இனிய உயிரை அழித்தது ?, இப்போது யாண்டை யான் - அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான் ?; அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல்உற்றதன்மையை - அவனுடைய மனைவியாகியசீதையை (அவனால் கொல்லப்பட்ட வாலியின் மகனான) அங்கதன் தேடத் தொடங்கிய நிலைமையை (வகையை); உரை செய்க என்ன - சொல்வாயாக” என்று இராவணன் கேட்க; சமீரணன் தனயன் சொல்வான் - வாயுகுமாரனான அனுமான் அதற்குப் பின்வருமாறு மொழி கூறினான்.

இராவணன் கேட்டகேள்விகள் இரண்டு. ஒன்று வாலியைக் கொன்ற இராமபிரானைப் பற்றியது; மற்றொன்று, கொல்லப்பட்ட வாலியின் மகனாயிருந்தும் அங்கதன், இராமனது மனைவியைத் தேட வந்த நிலைமை பற்றியது. ஈடு - வலிமை. “ஒருகரியீடழித்து ' (தேவாரம்) எறுழ் - வலிமை உணர்த்தும் உரிச்சொல். சமீரணன் - நன்றாகச் சஞ்சரிப்பவன் என்னும் பொருளது வாயு தேவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By what strength did he, with a strong-tipped arrow, take that Vālī's
  2. sweet life? Where now is this one called Irāmaṉ?
  3. And how is it that Aṅkatan has come seeking that man's wife?
  4. Tell me this,' he said; and the son of the Wind spoke.

What the poem says

Irāvaṇaṉ asks two questions: how Irāmaṉ found the strength to kill Vālī, and where he is now; and how Aṅkatan, the son of the slain Vālī, came to be searching for the wife of his father's killer. Aṉumaṉ, son of the Wind god, begins his reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṉuṭai īṭṭiṉāl av vāliyai eṟuḻ vāy ampāl
iṉ uyir uṇṭatu? ippōtu yāṇṭaiyāṉ irāmaṉ eṉpāṉ?
aṉṉavaṉ tēvi taṉṉai aṅkataṉ nāṭaluṟṟa
taṉmaiyai uraiceyka'eṉṉa camīraṇaṉ taṉayaṉ colvāṉ.