கம்பராமாயணம் 5890 · சுந்தர 13.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவியை நாடிவந்த செங்கணாற்கு - தனது தேவியாகியசீதையைத் தேடிக் கொண்டு வந்த, சிவந்த கண்களை உடைய இராமபிரானுக்கு; எங்கள் கோமான் - எங்கள் தலைவனான சுக்கிரீவன்; ஆவி ஒன்று ஆக நட்டான் - இருவர்க்கும் ஓர் உயிர் போல நட்புக்கொண்டவனாகி, அரும் துயர் துடைத்தி என்ன - (எனக்கு வாலியால் ஏற்பட்டுள்ள) போக்குதற்கு அரிய துன்பத்தைப் போக்கியருளுக என்று வேண்டிக்கொள்ள; ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் - சித்திரம் தீட்டுதலில் வல்லவர்க்கும் எழுத முடியாத வடிவழகு உடைய இராமபிரான்; உருமை யோடும் கோஇயல் செல்வம் முன்னே கொடுத்து - சுக்கிரீவன் மனைவியாகிய, ருமையையும், வானர அரசினுக்கு உரிய செல்வத்தையும் முன்னதாக அவனுக்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து; வாலியையும் கொன்றான் - பிறகு வாலியையும் அழித்து விட்டான். கவரப்பட்டமனைவியை உரியவனுக்கே தந்த வள்ளல், தன் மனைவியைப் பிறன் கவரப் பார்த்திருப்பானோ ? உறுதியாக மீட்பான் என்ற உண்மையை இராவணனுக்குக் குறிப்பாக உணர்த்துகின்றான் அனுமான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To the red-eyed one who came seeking his queen, our lord
- joined in friendship as one life; and when he asked, Wipe away my bitter grief,
- he whose form no painter can draw
- first gave him Urumai and the wealth of kingship, and killed Vālī too.'
What the poem says
Aṉumaṉ tells how Cukkirīvaṉ and Irāmaṉ became friends as close as one soul, and how Irāmaṉ promised to restore Cukkirīvaṉ's wife Urumai and his kingdom, and then killed Vālī.
The point is aimed at Irāvaṇaṉ: a hero who returned a stolen wife to her rightful husband will surely not sit by while his own wife is held by another; he will win her back.