கம்பராமாயணம் 5891 · சுந்தர 13.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயவன் தன்னொடுஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி - அந்தச்சுக்ரீவனுடனே அந்த ருசிய முகமலையில் மழைக்காலமாகிய நான்கு மாதங்கள் தங்கியிருந்து; மேய வெம் சேனை சூழ இனிது வீற்றிருந்த - வந்து கூடிய விரும்பத் தக்க வானர சேனைகள் தன்னைச் சுற்றிலும் நிற்க அவற்றின் நடுவில் இனிமையாக வீற்றிருந்த; வீரன் - மகாவீரனான இராமபிரான்; இனி போய் நாடும் என்ன - நீங்கள் இனி சென்று சீதையைத் தேடுங்கள் என்று கட்டளையிட; போந்தனம் - நாங்கள் தேடி வந்தோம்; புகுந்தது ஈது என்று - நடந்த காரியம் இது என்று; ஏயவன் தூதன் சொன்னான் - இராமபிரானால் ஏவப்பட்ட தூதுவனாகிய அனுமன் சொன்னான்: இராவணன் இதனை சொன்னான் - அதனைக் கேட்ட இராவணன் இந்த வார்த்தையைச் சொல்லலானான்.
இராமபிரான் தூதுஅனுப்பிய வரலாறு சுருக்கிக் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Staying four months there together with him,
- the hero sat at ease, surrounded by the gathered fierce armies,
- and said, Go and search; so we came. This is what happened,'
- so the sent messenger said. Irāvaṇaṉ then spoke these words.
What the poem says
Aṉumaṉ completes his short account: Irāmaṉ waited out the four months of the rainy season with Cukkirīvaṉ, the monkey hosts gathered round him, and he sent them out to search for Cītai. That is how they came. Irāvaṇaṉ now replies.