கம்பராமாயணம் 5892 · சுந்தர 13.88

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உம் குலத் தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியானை
வெம் கொலை அம்பில் கொன்றாற்கு ஆள் தொழில் மேல் கொண்டீரேல்,
எங்கு உலப்பு உறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால்
மங்குலில் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து. மாதோ'.

பொருள் · Meaning in Tamil

உம் குலத்தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சி யோனை - உங்கள்வானரக் குலத்தலைவனாக இருத்தலோடு ஒப்பற்ற மேன்மை உடையவனுமான வாலியை; வெம் கொலை அம்பின் கொன்றாற்கு - கொடிய கொலை செய்யும் அம்பினால் கொன்ற இராமனுக்கு; ஆள் தொழில் மேற் கொண்டீரேல் - அடிமையாதல் தொழிலையும் ஏற்றுக் கொண்டீர்களானால்; எங்கு உலப்புறும் நும் சீர்த்தி - உங்கள் புகழ் எங்கே சென்று முடிவதோ?; நும்மொடும் இயைந்தது என்றால் - அப்புகழ் உங்களோடு இயைவதே என்று உலகம் கூறுமானால்; மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து - மேகத்தினால் வளம்பெற்று விளங்குகின்ற இந்தஉலகம் பெண் தன்மை உடையதேயாம். தன் அரசனைக்கொன்றவனுக்கு ஆட்பட்டிருத்தல் இழிவுடையோர் செயல் என்பதை எதிர் மறைப் பொருளில் வஞ்சப்புகழ்ச்சியாக இராவணன் நிந்தித்தான் என்க. மாதுமை - மாதரின் தன்மை; பெண்தன்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you have taken up the work of servants to the man who killed
  2. with a cruel slaying arrow the one of matchless height, the head of your own race,
  3. where will your fame ever end? If such fame is fitting for you,
  4. then this cloud-blessed world has the nature of a woman indeed.'

What the poem says

Irāvaṇaṉ sneers at the monkeys: they now serve the very man who killed Vālī, the head of their race. In mock praise he says their fame is boundless, and if the world calls that fitting, it has lost all manliness.

The figure is ironic praise that is really blame: serving the slayer of one's own king, he says, is the act of base people.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'um kulat talaivaṉ taṉṉōṭu oppu ilā uyarcciyōṉai
veṅ kolai ampiṉ koṉṟāṟku āḷ toḻil mēṟ koṇṭīrēl,
eṅku ulappuṟum num cīrtti? nummoṭum iyaintatu eṉṟāl
maṅkuliṉ polinta ñālam mātumai uṭaittu. mātō'.