கம்பராமாயணம் 5893 · சுந்தர 13.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தம்முனைக்கொல்வித்து - 'தனது தமையனை(இராமனைக் கொண்டு) கொல்லச்செய்து; அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற - அந்தத் தமையனைக் கொன்ற இராமனிடம் அன்பு மேற்கொண்ட; உம் இன தலைவன் ஏவ - உங்கள் கூட்டத்துக்குத் தலைவனான சுக்கிரீவன் அனுப்ப; எமக்கு உரைக்கல் உற்றது யாது ? - நீ எனக்குச் சொல்ல வந்தது என்ன ? (மேலும்); எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை - எமது முன்னிலையில்தூதனாக வந்த நீ, போர் செய்த காரணம் யாது ? நும்மினைக் கொல்லாம் - தூதுவனாய் வந்த உன்னைக் கொல்லமாட்டோம்; நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் - மனம் பயப்படாமல் உண்மையைத் தெளிவாகக் கூறுவாய்' என்று அனுமனை நோக்கி இராவணன் கூறினான்.
“தூதனாக வந்தநீ, என்னிடத்தில் நேரில் வந்து தூது மொழி கூறாமல், போர் செய்த காரணம் என்ன ?' என்பது இராவணனது கேள்வி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your tribe's chief, who had his elder brother killed and then grew loving
- toward the one who killed him, has sent you; what have you come to tell us?
- And you who came as an envoy before us, why did you make war?
- We will not kill you. Have no fear in your heart; speak,' he said.
What the poem says
Irāvaṇaṉ presses Aṉumaṉ: Cukkirīvaṉ had his own brother killed and then became fond of the killer. What message has such a master sent? And why did an envoy, instead of delivering his words, wreck the grove and fight? He promises not to kill him and tells him to speak plainly.