கம்பராமாயணம் 59 · பால 2.39

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூற்றம் இல்லை, ஒர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையில் செவ்வியால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.

பொருள் · Meaning in Tamil

ஓர் குற்றம் இல்லாமையால் - கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; கூற்றம் இல்லை - கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை; தம் சிந்தையின் செம்மையால் - அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை - சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால் - நல்ல அறச் செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை - மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

கூற்றம் இல்லை யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை என்பது பொருளாகாது. இயற்கை மரணமின்றி இடையறவுபடுகின்ற அற்பாயுட் சாவு இல்லை என்பதே கருத்து. 'குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை' என்ற குறள் (434) இங்கு நினைவுகூரத் தக்கது. ஓர் - குறுக்கல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no Death there, since there is not a single fault;
  2. there is no anger, because their minds are upright;
  3. since they have no strength for anything but good dharma,
  4. there is only rising, and no falling into baseness.

What the poem says

The people of Kōcalam are without fault, so Death has no power over them. This does not mean no one ever dies, but that no one is cut down before their time. Their minds are upright, so there is no anger. They do nothing but righteous deeds, so there is only advancement and nothing base or low. The Tirukkuṟaḷ teaches the same: guard against faults as you would guard wealth, for fault is the enemy that brings ruin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟam illai, ōr kuṟṟam ilāmaiyāl;
cīṟṟam illai, tam cintaṉaiyiṉ cemmaiyāl;
āṟṟal nal aṟam allatu illāmaiyāl,
ēṟṟam allatu iḻitakavu illaiyē.