கம்பராமாயணம் 591 · பால 10.39

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தம் இல் நோக்கு இமை அணை கிலாமை ஆல்,
பைசுமை தொடி, ஓவியப் பாவை போன்றனள்,
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல,
மைந்தனும் முனியொடு மறையப் போயினான்.

பொருள் · Meaning in Tamil

அந்தம் இல்- (செல்லும் இராமனைத் தொடர்ந்து போன முடிவில்லாத; நோக்கு இமை - (கண் இமையாது பார்த்துக் கொண்டேயிருப்பதால்) பார்வை உடைய அவளது இமைகள்; அணைகிலாமையால் - பொருந்தாதலால்; பைந்தொடி - பொன் தொடி அணிந்த சீதையானவள்; ஓவியம் பாவை போன்றனள் - சித்திரப் பதுமை போல (அசைவற்று) நின்றாள்; சிந்தையும் நிறையும் - அவளது மனத்தின் நினைப்பும் உறுதியும்; மெய்ந் நலனும் - உடல் அழகும்; பின்செல - (தன்பின்னே) தொடரும்படி; மைந்தனும் - இராமனும்; முனியொடு - விசுவாமித்திர முனிவனோடு; மறையப் போயினான் - கண் பார்வை மறையுமாறு சென்றான்.

இராமன், சீதை: இராமன் முனிவர் பின்னே செல்லும்போது சீதையின் பார்வை அந்த இராமனையே தொடர்ந்து செல்ல, அச்சீதையே கண் இமைத்தால் அழகனைக் காண்பது நின்றுவிடுமே எனக் கருதிக் கண்கொட்டாது நின்றாள். அப்படி நின்றநிலை ஓவியப் பாவை போன்றது என்றார்.

சீதையின் மனம் அவன்பின்னே சென்றதால் பெண்மைக் குணத்தை அவளால் அடக்க இயலவில்லை; ஆதலால், தன் மனக் காதலை வெளிப்படுத்தினாள்; இத்தகைய காம விகாரத்தால் அவளது உடலழகும் குறைவுற்றது

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since her endless gaze would not let her eyelids close,
  2. she of the green bangles stood like a figure in a painting;
  3. and, with her mind, her composure and her body's beauty following after him,
  4. the young prince went on with the sage until he passed from sight.

What the poem says

Irāmaṉ has to walk on with Vicuvāmittiraṉ. Cītai watches him go without blinking, afraid that even a blink would cost her a glimpse of him, and she stands as still as a painted figure. Her thoughts, her womanly reserve and even the bloom of her beauty seem to follow him away, leaving her pale and lovesick.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antam il nōkku imai aṇaikilāmaiyāl,
paintoṭi, ōviyap pāvai pōṉṟaṉaḷ,
cintaiyum niṟaiyum meyn nalaṉum piṉ cela,
maintaṉum muṉiyoṭu maṟaiyap pōyiṉāṉ.