கம்பராமாயணம் 5911 · சுந்தர 13.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும்'இவை சொல்லியது எற்கு ஒரு
குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம்; இது
நன்று நன்று'என மாநகை செய்தனன்;
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்.
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்றுஅனுமன் கூறியவுடன்; வென்றி என்று ஒன்று தான் அன்றி வேறு இலான் - வெற்றி என்று சொல்லப்படும் ஒன்றுதானே அல்லாமல், அதற்குமாறான தோல்வியை (இது நாள் வரை அறியாதவனான இராவணன்; இவை எற்கு சொல்லியது - இச்செய்திகளை எனக்குச் சொன்னது; குன்றின் வாழும் குரங்கு கொல் ஆம் - மலையில் திரிந்து வாழும் ஒரு அற்பக் குரங்கு போலும் !; இது நன்று நன்று என மாநகை செய்தனன் - இது நன்றாய் இருக்கிறது என்று சொல்லி பெருஞ்சிரிப்புச் சிரித்தான்.
நன்று நன்று; அடுக்கு இகழ்ச்சிக்குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he said this, 'The one who spoke these things to me
- is a monkey that lives on some hill! This is fine,
- fine indeed!' and he laughed a great laugh,
- he who had known nothing but victory.
What the poem says
Irāvaṇaṉ, who until now has known only victory and never defeat, bursts into scornful laughter: all this moral instruction comes from a mere hill-dwelling monkey. The repeated 'fine, fine' is mockery.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum'ivai colliyatu eṟku oru
kuṉṟiṉ vāḻum kuraṅku kolām; itu
naṉṟu naṉṟu'eṉa mānakai ceytaṉaṉ;
veṉṟi eṉṟu oṉṟutāṉ aṉṟi vēṟu ilāṉ.