கம்பராமாயணம் 593 · பால 10.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மால் உற வருதலும் - காமம் மிகுதியாகத் தோன்றுதலும்; மனமும் மெய்யும் - நெஞ்சமும் உடலும்; நூல் உறு - நூல் இழையை ஒத்துள்ள; தன் மருங்குல் போல் - தனது நுண்ணிய இடைபோல; நுடங்குவாள் - தளர்கின்ற சீதையின்; கால் உறு நெடுங்கண் - கரிய நீண்ட கண்களின் மூலம்; வழிப் புகுந்த காதல்நோய் - உள்ளே புகுந்த காதல் நோயானது; பால் உறு பிரை என - பாலில் சேர்ந்த பிரைத் துளிபோல; எங்கும் பரந்தது - உடம்பு முழுதும் பரவியது.
பிரை: பாலை உறையச் செய்யும் மோர்த் துளி. அது முதலிலே பாலின் ஓர் இடத்தில் சேர்ந்து உடனே அப்பால் முழுவதையும் மாற்றுகிறது. அதுபோலக் காமநோய் முதலில் கண்வழியே உள்ளே சென்று உடனே உடம்பு முழுவதும் பரவியது என்றார்.
காதல் நோயால் உடல் நூல்போல் ஒடுங்கியது. காதல் புகுதற்குக் கண்ணின் கருமணியே வழியாகும்.
'குடப்பால் சில்லுறைபோலப் படைக்கு நோயெல்லாம் தான் ஆயினனே' - புற. 276
வேறு உரை: நீர் ஓரிடத்தில் சேர்ந்து பரவுவதற்கு வாய்க்கால் வழியாக அமைவதுபோலக் காம ஆசை மனத்தில் சென்று பரவக் கண் வழியாக உள்ளது. கண்களுக்குக் கால்வாய் உவமை; காதல் நோய்க்கு நீர்ப் பெருக்கு உவமை; கால் உறு கண்: கருமணி பாவை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As love-madness came over her, she drooped in mind and body
- like her own waist, fine as a thread; and the love-sickness that entered
- by way of her long, dark eyes
- spread everywhere, like a drop of starter in milk.
What the poem says
Lovesickness has entered Cītai through her eyes and spread through her whole being, as a drop of buttermilk added to milk soon turns all of it to curd. Her mind and body droop and grow as thin as her slender waist. The commentary gives another reading: the eyes are a channel (kāl) through which longing flows in like water and floods everything. It cites a similar image from the Puṟanāṉūṟu.