கம்பராமாயணம் 594 · பால 10.42

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நோம் உறு நோய் நிலை நுவலகிற்றிலள்,
ஊமரின் மனம் அத்து இடை உன்னி விம்முவாள்;
காமனும் ஒரு சரம் கருத்தில் எய்தனன்,
வேம் எரி அதன் இடை விறகு இட்டு என்ன ஏ;

பொருள் · Meaning in Tamil

நோம் - (சீதை காமநோயால்) வருந்துவாள்; உறும்நோய் நிலை நுவலகிற்றிலள் - (கணத்திற்குக் கணம் தன்னிடம்) மிகுகின்ற அக் காமநோயின் நிலையை எவருடனும் சொல்ல முடியாதவளாய்; ஊமரின் மனத்திடை - ஊமைகள் போல மனத்திற்குள்ளேயே; உன்னி விம்முவாள் - நினைந்து தேம்புவாள்; காமனும் - (அப்பொழுது) மன்மதனும்; ஒரு சரம் - ஓர் அம்பினை; கருத்தில் - அவளது மனத்திலே; வேம் எரி அதனிடை - எரிகிற நெருப்பிலே; விறகு இட்டு என்ன - விறகைப் போட்டாற்போல; எய்தனன் - எய்தான்.

மன்மதன் பாணம்: மன்மதன் தன் ஐங்கணைகளுள் நினைப்பை மிகுவிக்கக் கூடிய தாமரை மலரைச் சீதைமேல் எறிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She suffers, and cannot tell the state of the sickness that grows in her;
  2. like one who is dumb, she broods within her mind and sobs;
  3. and Kāma too shot an arrow into her heart,
  4. as if piling wood onto a fire already blazing.

What the poem says

Cītai's longing grows by the moment, but she cannot speak of it to anyone. She suffers in silence, like someone who cannot speak. To make it worse, Kāma shoots one of his five flower-arrows into her heart, the lotus, which heightens longing. It is like throwing firewood onto a blaze.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōm uṟum nōy nilai nuvalakiṟṟilaḷ,
ūmariṉ maṉattiṭai uṉṉi vimmuvāḷ;
kāmaṉum oru caram karuttiṉ eytaṉaṉ,
vēm eri ataṉiṭai viṟaku iṭṭeṉṉavē;