கம்பராமாயணம் 595 · பால 10.43

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிழல் இடு குண்டலம் அதனில் நெய் விடா
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணின் ஆள்,
சுழல் இடு கூந்தலும் துகிலும் சோர்தரத்
தழல் இடு வல்லியே போலச் சாம்பினாள்.

பொருள் · Meaning in Tamil

நிழல் இடு - ஒளி வீசுகின்ற; குண்டலம் அதனின் - காதணியான குண்டலம் வரை சென்று; நெய் இடா - நெய்தடவப் பெறாமலும்; அழல் இடா - நெருப்பிலே வைத்துக் காய்ச்சப் பெறாமலும்; மிளிர்ந்திடும் அயில்கொள் - விளங்கும் வேல் போன்ற; கண்ணினாள் - விழிகளையுடைய சீதை; சுழலிடு கூந்தலும் - கடை குழன்ற தன் கூந்தலும்; துகிலும் சோர்தர - உடையும் நெகிழும்படி; தழல்இடு - நெருப்பிலே போட்ட, வல்லியே போல - பூங்கொடி போல; சாம்பினாள் - வாடினாள்.

நெய் இடாஅழல் இடா மிளிர்ந்திடும் அயில்: இல்பொருள் உவமை. சுழல் இடு கூந்தல்: பனிச்சை. சீதை நினைப்பு மிகுதியால் உடற்சோர்வுற்று மிக வருந்தினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She whose eyes reach to her gleaming earrings and shine like spears never rubbed with oil
  2. nor heated in the fire,
  3. as her curling tresses and her garment slipped loose,
  4. drooped like a creeper cast into the flames.

What the poem says

Cītai's long eyes stretch toward her earrings and gleam like spearheads. But a real spear is made bright by heating and oiling, and her eyes shine with no such treatment. The commentary calls this a "comparison with something that does not exist." Weak with longing, she lets her hair and clothes come loose and wilts like a creeper thrown into a fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niḻal iṭu kuṇṭalam ataṉiṉ ney iṭā
aḻal iṭā miḷirntiṭum ayil koḷ kaṇṇiṉāḷ,
cuḻaliṭu kūntalum tukilum cōrtarat
taḻal iṭu valliyē pōlac cāmpiṉāḷ.