கம்பராமாயணம் 596 · பால 10.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தழங்கிய கலைகளும் - ஒலிக்கின்ற மேகலை அணிகளையும், நிறையும் - மனவுறுதியையும், சங்கமும் - சங்கு வளையல்களையும்; மழுங்கிய உள்ளமும் - வாட்டம் அடைந்த மனத்தையும்; அறிவும் - அறிவையும்; மாமையும் - மேனியின் நிறத்தையும்; இழந்தவள் - (அப்பொழுது காதல் நோயால்) இழந்துநின்ற சீதை; இமையவர் கடைய - தேவர்கள் கடலைக் கடைந்தபொழுது; யாவையும் வழங்கிய - (தன்னிடமுள்ள சிறந்த பொருள்கள்) எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட; கடல் என - கடல் போல; வறியள் ஆயினாள் - எந்த ஒரு சிறந்த பொருளும் தன்னிடம் இல்லாதவள் ஆனாள்.
பெண்களுக்குச் சிறந்த அணிகளாகிய மேகலை முதலியவற்றையும், குணங்களான நிறை முதலானவற்றையும் சீதை இழந்ததால் 'வறியள் ஆயினாள்' என்றார். மேகலைகள் எட்டுக் கோவைகள் உள்ளமைபற்றி கலைகள் என்றார். இமையவர்: கண் இமையாதவர்: இமையில் சிறப்பு உள்ளவர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her jingling girdle, her composure, her conch-shell bangles,
- her heart now dimmed, her wits, her fair complexion —
- having lost them all, she was left bare, like the sea
- that gave up everything it held when the unblinking gods churned it.
What the poem says
Cītai loses everything. Her girdle and bangles slip off her thinning body, and she loses her composure, her peace of mind, her good sense and her glowing colour. She is left as empty as the Ocean of Milk after the gods churned it and took all its treasures. Kampaṉ returns to the churning myth that he used just before to describe her beauty.