கம்பராமாயணம் 597 · பால 10.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கலம் குழைந்து உக - அணிகள் நெகிழ்ந்து விழவும்; நெடு நாணும் கண்அற - மிக்க நாணமும் (தன்னிடமிருந்து) ஒழியவும்; நலம் குழைதர - அழகு மாறவும்; நகில் முகத்தின் - தன் முலைகளிடத்தில்; ஏ உண்டு - காம பாணத்தால் அடிப்பட்டு; மலங்கு உழை என - (வேடனது அம்பால் அடிபட்டு) வருந்தும் மான்போல்; உயிர் வருந்திச் சோர்தர - உயிர் வருந்தி (ச்சீதை) வாடி நிற்க; பொலங்குழை மயிலை - (அதைப் பார்த்த தோழியர்) பொன்குழையாகிய காதணியை அணிந்த மயில்போலும் சாயலையுடைய அச்சீதையை; அரிதின் - சிரமப்பட்டு; கொண்டு போயினார் - அழைத்துச் சென்றார்கள்.
சீதை காமநோயால் வருந்தினாள்; அதனால் அதைத் தணிக்கும்பொருட்டு அவளைத் தக்க இடத்திற்குத் தோழியர் கொண்டு போயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her ornaments loosening and slipping off, her deep modesty gone,
- her beauty wilting, struck by the arrow upon her breasts,
- her life fainting like a stricken deer, as she sank,
- they led away, with difficulty, the peacock with golden earrings.
What the poem says
Struck by Kāma's arrow, Cītai is like a deer wounded by a hunter. Her jewels slip off, her modesty is gone and her beauty fades. Her companions see her state and, with some trouble, lead the girl, graceful as a peacock and wearing gold earrings, to a place where she can rest and recover.