கம்பராமாயணம் 598 · பால 10.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காதொடும் - காதுடன்; குழைபொரு - குண்டலங்களையும் முட்டுகின்ற, கயல்கண் - கயல்மீன்போல் பிறழும் கண்ணினையுடைய; நங்கைதன் - சீதையின்; பாதமும் கரங்களும் - திருவடிகளையும் கைகளையும்; அனைய பல்லவம் - ஒத்துள்ள பல்லவம் என்று சொல்லப்படுகின்ற; குழையொடும் - செந்தளிர்களுடனும்; தாதொடும் - பூந்தாதுகளுடனும்; அடுத்த - பொருந்தியதும்; தண்பனிச் சீதம் நுண்துளி - மிகக் குளிர்ந்த நுட்பமான பனித்துளிகள் தெளிக்கப் பட்டதுமான; மலர் அமளி - பூக்களால் ஆகிய படுக்கையில்; சேர்த்தனர் - (சீதையைத் தோழியர்) கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
பல்லவம்: மென்மையான தளிர். மலர் அமளி: சீதையின் வெம்மையைத் தணிவிக்கப் பூந்தாதுகளையும் தளிர்களையும் கீழே இட்டு மலர் பரப்பிய படுக்கை. தண் சீதப் பனி நுண்துளி என மாற்றுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lady whose kayal-fish eyes strike at her ears and her earrings —
- on tender shoots like her own feet and hands,
- with pollen and young leaves, sprinkled with cool,
- chill, fine drops of dew — on such a bed of flowers they laid her.
What the poem says
To cool her fever of longing, Cītai's companions make her a bed of fresh flowers. They spread tender red shoots like her own hands and feet, pollen and young leaves, and sprinkle it all with cold dew. Her eyes, darting like kayal fish, are so long they seem to reach her ears.