கம்பராமாயணம் 5935 · சுந்தர 13.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் - (சீதாராமர்கள்பக்கல்) தான் கொண்டுள்ள பக்தியாகிய பற்று நீங்காத மனத்தை உடைய அனுமனும்; வெம் தீ - அந்தக் கொடிய நெருப்பு; வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்க நிற்பினும் - மலையால் அமைக்கப்பட்டது போன்ற தனது உடலை முழுவதும் கவர்ந்து நின்று எரித்தாலும்; சுடாது நின்ற நீர்மையை நினைவின் நோக்கி - தன்னைச் சுடாது குளிர்ச்சியோடு விளங்கிய தன்மையை தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து உணர்ந்து; சனகன் பாவை கற்பினால் இயன்றது - 'சனகனின் மகளாகிய சானகியின் கற்பின் சிறப்பால் ஆனது (இது) ' என்பான் - என்று தீர்மானித்தவனாகி; பெரியது ஓர் களிப்பன் ஆனான் - ஒப்பற்ற பெருங்களிப்பை உடையவன் ஆனான்.
நெருப்பு தன்னைச்சுடாமல் இருப்பதற்குக் காரணம் பிராட்டியின் கற்புச் சிறப்பே என்று உணர்ந்து அனுமன் மகிழ்ந்தனன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though the cruel fire stood ready to swallow his body, which seemed made of a mountain,
- seeing in his mind how it stood there without burning,
- Aṉumaṉ, whose heart never let go of the cord of love, said, 'This is wrought
- by the chastity of Caṉakaṉ's daughter,' and was filled with great joy.
What the poem says
Aṉumaṉ, his devotion to Irāmaṉ and Cītai unbroken, notices that the fire wrapped around his mountain-like body does not burn him. He reasons that this can only be the power of Cītai's chastity, and is overjoyed.