கம்பராமாயணம் 5934 · சுந்தர 13.130

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்டமும் கடந்தான் அம் கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக்
குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச்
சண்ட வெம் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தாவு இல்
மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ.

பொருள் · Meaning in Tamil

அண்டமும்கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது - அண்டங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாலுள்ள சத்திய லோகத்தவனான பிரமனது உள்ளங்கையில் உள்ள நெருப்பும் குளிர்ச்சி அடைந்தது; அங்கி குண்டமும் குளிர்ந்த - வைதிக அக்கினிக் குண்டங்களும் குளிர்ந்துவிட்டன; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த - மேகத்தின் இடையில் உள்ள இடிகள் யாவும் குளிர்ச்சியுற்றன; கொற்றம் சண்டம் வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா இல் மண்டலம் குளிர்ந்த - வெற்றி பொருந்திய வலிய வெப்பம் மிகுந்த கிரணங்கள் கொண்டனவாய், முழங்கி எழும் இருளை விழுங்குகின்ற அழிவற்ற சூரிய மண்டலம் குளிர்ச்சியடைந்தது; மீளா நரகமும் குளிர்ந்த - தன் தன்மையினின்றும் மாறாத நரகத் தீயும் குளிர்ந்தது.

பிராட்டியின்பிரார்த்தனைக்கு இரங்கி, எங்கும் உள்ள அக்கினிகளும் தம் கொடுமை நீங்கி அனுதாபம் காட்டலாயின என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fire in the palm of him who is beyond the cosmos grew cool; the sacrificial fire-pits
  2. grew cool; all the thunder in the clouds grew cool; the flawless orb
  3. whose victorious, fierce, hot rays swallow the roaring darkness
  4. grew cool; even unending hell grew cool.

What the poem says

The list continues: the fire in Piramaṉ's hand in his world beyond the universe, the Vedic fire altars, the thunderbolts in the clouds, the blazing sun itself, and even the fires of hell all turn cool. Every fire in existence takes pity in answer to Cītai's prayer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭamum kaṭantāṉ aṅ kai aṉaliyum kuḷirntatu; aṅkik
kuṇṭamum kuḷirnta; mēkattu urum elām kuḷirnta; koṟṟac
caṇṭa veṅ katira ākit taḻaṅku iruḷ viḻuṅkum tā il
maṇṭalam kuḷirnta; mīḷā narakamum kuḷirnta mātō.