கம்பராமாயணம் 5937 · சுந்தர 13.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முழுவதும் தெரியநோக்கி - அந்த இலங்கை நகர்முழுவதையும் நன்றாகப் பார்த்துக் கொண்டே; ஊர் முற்றும் முடிவில் சென்றான் - நகர் முழுவதும் சுற்றிக் கடை எல்லையில் சென்றவனான அனுமான்; வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் - தப்பிப் போதற்குரிய சமயம் இதுதான் என்று எண்ணி,; வலிதின் பற்றி தழுவினன் - (இரு புறத்துக் கயிறுகளையும்) வலியப் பிடித்து, (இரு புறத்து விலாவிலும் சேர்த்து) இடுக்கிக் கொண்டு; இரு நூறாயிரம் புயம் தடம் கை தாம் போடு எழு என நால - இரண்டு இலட்சம் தோள்களும் பெரிய கைகளும் இரு புறத்துக் கயிற்றுடனே தூண் போலத் தொங்கும்படி; விண் மேல் எழுந்தனன் - வானின் மேல் உயர் எழும்பினான்; எல்லாம் விழுந்த - அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே விழுந்தன. இலங்கை நகர்முழுவதையும் காணுதல் மூலம், தனது கருத்தை நிறைவேற்றிக் கொண்ட அனுமன், திடீரென மேலே எழும்பினான். அப்போது, அவனைக்கயிற்றொடு பற்றியிருந்த அரக்கர் கூட்டம் கீழே விழுந்தன என்க. புயத்திற்குஎழு (தூண்) உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having looked closely at everything, he went to the city's farthest edge;
- thinking, 'This is the time to slip away,' he gripped hard
- and hugged the ropes, so that two hundred thousand shoulders and great arms hung
- like pillars with the ropes, and he rose into the sky; all of them fell.
What the poem says
Once he has seen the whole city and reached its outer edge, Aṉumaṉ decides the moment has come. Clamping the ropes on both sides, he springs into the sky, so that the arms of the hundred thousand demons holding them dangle like pillars, and then the whole crowd drops to the ground.