கம்பராமாயணம் 5943 · சுந்தர 13.139

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெள்ளியின் பொன்னின் நானா விளங்குபல் மணியின் விஞ்சை
தெள்ளிய கடவுள் தச்சன், கை முயன்று அரிதின் செய்த,
தள் அறு மனைகள் தோறும், முறை முறை தாவிச் சென்றான்;
ஒள் எரியோடும் குன்றத்து ஊழிவீழ் உருமொடு ஒப்பான்

பொருள் · Meaning in Tamil

வெள்ளியின்பொன்னின் நானா விளங்கு பல் மணியின் - வெள்ளியாலும் தங்கத்தாலும், பலவகைப்பட்ட பிரகாசிக்கின்ற அழகிய இரத்தினங்களாலும்; விஞ்சை தெள்ளிய கடவுள் தச்சன் - சிற்பக்கலையில் தேர்ந்தவனாகிய தெய்வத் தச்சனான விசுவகர்மன்; கை முயன்று அரிதின் செய்த - தன் கைவன்மையால் முயற்சி செய்து அருமையாக அமைத்த, தள்ள அரு மனைகள் தோறும் - அழித்தற்கு அருமையான மாளிகைகளில் எல்லாம்; ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் - ஒள்ளிய நெருப்புடனே மலையின் மீது கற்பாந்த காலத்தில் விழுகின்ற பேரிடியைப் போன்றவனாய், முறை முறை தாவிச் சென்றான் - வரிசையாகத் தாவித் தாவித் தீயை வைத்துக் கொண்டு செல்வானாயினான்.

இலங்கை நகரத்துமாளிகைகளுக்கு மலைகளும், தன் வாலின் நெருப்போடு பாயும் அனுமனுக்கு நெருப்புடன் வீழும் இடியும் உவமைகளாக வந்தன. கை முயலுதல் - செய்வதறிந்து செய்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through every flawless mansion that the divine architect, clear in his craft,
  2. built with toil of hand and rare skill, of silver, of gold, and many kinds of shining gems,
  3. he went leaping one after another,
  4. like the doomsday thunderbolt falling with bright fire on mountains.

What the poem says

Aṉumaṉ leaps from mansion to mansion, the fabulous buildings made by the celestial craftsman Vicuvakarmaṉ in silver, gold and gems, setting each alight. The mansions are like mountains and Aṉumaṉ with his fiery tail like the thunderbolt that strikes them at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷḷiyiṉ poṉṉiṉ nāṉā viḷaṅkupal maṇiyiṉ viñcai
teḷḷiya kaṭavuḷ taccaṉ, kai muyaṉṟu aritiṉ ceyta,
taḷ aṟu maṉaikaḷ tōṟum, muṟai muṟai tāvic ceṉṟāṉ;
oḷ eriyōṭum kuṉṟattu ūḻivīḻ urumoṭu ottāṉ