கம்பராமாயணம் 5949 · சுந்தர 14.5

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூய்க் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர்; மாதரும் வீரரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுத்தினவும் தெரியாமையால்.

பொருள் · Meaning in Tamil

வீரரும் மாதரும்- அரக்கவீரர்களும் மகளிரும்; கூய் - (எரிபற்றியதனால்) பேராரவாரம் செய்து; குஞ்சியில் கூந்தலில் - தம்மைச் சார்ந்தவரின் தலைமயிரில், கொழும் புனல் - மிக்க நீரை; மீ சொரிந்தனர்- மேலே ஊற்றுவாராயினர்; ஏய்த்த தன்மையினால் - (அங்ஙனமாகியும், தம்மவரின் செம்பட்டை மயிரும் நெருப்பும்) நிறத்தில் ஒத்திருக்கின்ற இயல்பினால்; எரி இன்மையும் - (தலைமயிர்களில்) நெருப்பு இல்லாமையும்; தீ கொளுந்தினவும் - நெருப்புப் பற்றினவற்றையும்; தெரிகின்றிலார் - வேறுபாடு அறியாதவராக இருந்தார்கள்.

சில அரக்கர் தம்மைச் சேர்ந்த ஆடவர் மகளிரின் தலைமயிரில் நெருப்புப் பிடிக்கவே, கூவி, அவர்கள் தலையில் நீரை ஊற்றியும், எரி அவிந்ததா, அவிய வில்லையா என்று தெரியாதவராயிருந்தனர். அவர்களது தலை மயிர் செம்பட்டையாதலின், நெருப்புக்கும் அதற்கும் வேறுபாடு தெரியவில்லை என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crying out, they poured abundant water over the hair of the men
  2. and the tresses of the women; warriors and women alike,
  3. because the colours matched, could not tell
  4. where there was no fire and what had caught alight.

What the poem says

Demons pour water over the heads of their companions whose hair has caught fire, but the demons' hair is naturally reddish-brown, so they cannot tell whether the flames are out or still burning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūy koḻum puṉal kuñciyil kūntalil
mīc corintaṉar; vīrarum mātarum
ēytta taṉmaiyiṉāl eri iṉmaiyum
tīk koḷuntiṉavum terikiṉṟilār.