கம்பராமாயணம் 5948 · சுந்தர 14.4

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான் அகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார்;
தேன் அகத்து மலர் சிலர் சிந்திய
கான் அகத்து மயில் அன்ன காட்சியார்.

பொருள் · Meaning in Tamil

தேன் அகத்தமலர் பல சிந்திய - தேனைத் தன்னுள்ளேஅடக்கிய பலவகையான மலர்கள் சிதறி விழப்பெற்ற; கானகத்து மயில் அன்னகாட்சியார்- காட்டிலே (தம்விருப்பின்படி விளையாடுகின்ற) மயில் போன்ற சாயலை உடைய மகளிர்கள்; நெடும் புகை - நெடுந்தூரம் பரந்த புகை; வானகத்தை மாய்த்தலால் - ஆகாயத்தை மறைத்ததனால்; போனதிக்கு அறியாது - (தம் கணவர் உயர எழுந்து) போன திசையைத் தாம்இன்னதென்று உணராமல்; புலம்பினார் - வாய்விட்டு அழுவாராயினார். வானையும் மறைத்தபுகையில், தம் கணவர் உய்ந்து போன திசை தெரியாது மகளிர்கள் வருந்தினர் என்க. மாய்த்தல் - மறைத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the long smoke blotted out the sky,
  2. they wailed, not knowing which way their men had gone,
  3. those who looked like peacocks in a forest
  4. strewn with many honey-filled flowers.

What the poem says

The demon women, graceful as peacocks in a flowery forest, weep because the smoke has hidden the whole sky, and they cannot see in which direction their husbands, who rose into the air to escape, have fled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉakattai neṭum pukai māyttalāl
pōṉa tikku aṟiyātu pulampiṉār;
tēṉ akatta malar pala cintiya
kāṉakattu mayil aṉṉa kāṭciyār.