கம்பராமாயணம் 5947 · சுந்தர 14.3

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியில் செம் சுடர்க் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்
அணி வளைக் கை நல்லார் அலமந்து உளார்.

பொருள் · Meaning in Tamil

மணியின் ஆயவயங்கு ஒளி மாளிகை - இரத்தினங்களால் அமைக்கப்பட்ட விளங்குகின்ற ஒளியை உடைய மாளிகைகள்; பிணியின் செஞ்சுடர் கற்றை பெருக்கலால் - தொகுதியாக, செந்நிறமான ஒளியின் திரளை வீசுவதால்; திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார்- நெருக்கங்கொண்ட நெருப்பு பிடித்த இடத்தையும் பிடியாத இடத்தையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களாய்; அணிவளைக்கை நல்லார் அலமந்து உளார் - அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் இன்னது செய்வதென்றுஅறியாமல் குழப்பமுற்று வருந்தினர். மாளிகை வீசும் மணி ஒளிக்கும், தீ பரவிய செஞ்சுடர் ஒளிக்கும் வேற்றுமை காணாது, மகளிர்கள் மயங்கி வருந்தினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the jewelled, shining mansions
  2. poured out masses of red light,
  3. the women with lovely bangled arms, unable to tell where the dense fire had caught and where not,
  4. were bewildered.

What the poem says

The jewelled mansions always glowed red, so now the women cannot tell the glow of the gems from the glare of the flames, and do not know which parts are burning and which are not.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇiyiṉ āya vayaṅku oḷi māḷikai
piṇiyiṉ ceñ cuṭark kaṟṟai perukkalāl
tiṇi koḷ tī uṟṟatu uṟṟila tērkilār
aṇi vaḷaik kai nallār alamantuḷār.