கம்பராமாயணம் 5946 · சுந்தர 14.2

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாசல் இட்ட எரி மண மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கிற்றால்
ஊசல் இட்டு என ஓடி உளைந்து உலைப்
பூசல் இட்டது இரியல் புறம் எலாம்.

பொருள் · Meaning in Tamil

வாசல் இட்ட எரி- மாளிகையின் வாயிலில் அனுமனால் பற்றவைக்கப்பட்ட நெருப்பு; மணி மாளிகை மூச முட்டி - அழகிய மாளிகையை மொய்த்தாற் போலச் சூழ்ந்து தாக்கி; முழுதும் முருக்கலால் - முழுவதையும் எரித்து அழித்ததனால்; இரியல் புரம் எலாம் - நிலை தளர்ந்த அந்த நகரத்து மக்கள் எல்லாம்; ஊசல்இட்டு என ஓடி - ஊஞ்சல் ஆடுவதுபோல் (போகும்வழி அறியாது) இங்கும் ஆங்குமாக ஓடி; உலைந்து உளை பூசல் இட்ட - வருந்தி வருத்தத்தினாலாகும் பேரொலியை உண்டாக்கினர்.

மாளிகைகள்முழுவதும் எரிந்து அழிந்ததனால், அந்நகரத்து மக்கள் அச்சத்தால் விரைந்து வெளியேறி ஓடுவதும், தமது பொருளை நினைந்து மீள நகரினுள் வருவதுமாய் இருத்தலால் ஊசல் இட்டு என ஓடி' எனக் கூறப்பட்டது. ஊசல் இட்டு மகிழ வேண்டிய மாளிகையில் மக்கள் ஊசல் போல அலைந்து திரிந்தனர் என்பது குறிப்பு. “புரம்' என்பது இட ஆகு பெயராய் நின்று நகரத்து மக்களைக் காட்டிற்று. உளை பூசல் - வருந்தி அழைக்கும் கூப்பாடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the fire set at the doors swarmed over the jewelled mansions
  2. and consumed them wholly, all the city's people, scattered in flight,
  3. ran back and forth as if on a swing,
  4. and, worn out, raised cries of distress.

What the poem says

The people of Ilaṅkai, panicking, run out of their burning houses and then back in to save their belongings, swinging to and fro like a swing. There is irony in the image: in mansions made for the pleasure of swinging, the people now sway helplessly themselves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vācal iṭṭa eri maṇi māḷikai
mūca muṭṭi muḻutum murukkalāl
ūcal iṭṭu eṉa ōṭi ulaintu uḷai
pūcaliṭṭa iriyal puram elām.